புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி - 5

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி - 5*
கடந்த பதிவின் தொடர்ச்சி ..
குலோரிந்தாவின் அழைப்பிற்கு இணங்கிய சுவாட்ஸ் ஐயர் *1785 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்* திருநெல்வேலிக்கு திரும்பினார். இது இவரின் இரண்டாம் பயணம் ஆகும். இந்த பயணத்தின் பொது அவர் இராமநாதபுரத்தில் ஓர் *ஆங்கில வட்டாரப்பள்ளி* யை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு அப்படியே வரும் வழியில் தூத்துக்குடியை பார்வையிட்டு அங்கு *மாற்கு 8.36* ல் இருந்து பிரசங்கம் கொடுத்தார்.அதன் பின்பு அவர் பாளையங்கோட்டை வந்து முன்று வாரங்கள் தங்கினார். இந்த முன்று வாரங்களில் சில நாட்களில் ஒரே நாளில் இரண்டு முன்று ஆலய போதனைகள் கூட செய்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
அந்த காலகட்டத்தில் திருநெல்வேலியில் இருந்த *80* பேருக்கு திருவிருந்து பரிமாறினார். அந்த சிறு கூட்டம் நன்றியோடு அவரை வாழ்த்தியது.
அவர் குலோரிந்தாவிடம் அமைந்த கிறிஸ்தவ பண்புகளுக்காக அவளை நம்பிக்கையான பொறுப்பில் அமர்த்திருக்க, பனி செய்வர்தர்க்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை அவர் கடிந்து கொண்டதாக தெரிகிறது. குலோரிந்தா அம்மையார் சுவாட்ஸ் ஐயரின் பயணச்செலவாக ருபாய் 100 ஐ கொடுக்க வரும் போது, *தீமையே இயல்பாக கொண்ட மனிதர்கள் அவளை பற்றி தவறாக கணித்து எச்செயலையும் சரியான கூலி கொடுத்தே முடிப்பார்* என்ற குறை கூடாது என்பதற்காக அந்த பணத்தை வாங்க மறுத்ததாக தெரிகிறது.
திருநெல்வேலியை சந்தித்து விட்டு சுவாட்ஸ் ஐயர் தஞ்சாவூர் சென்ற போது தம்முடன் *பச்சைமுத்து* என்பவரின் 7 வயது மகனையும்.12 வயதுடைய கவிஜர் *தேவ சகாயம்* என்பவரின் மகன் *வேதநாயகம்* என்பவரையும் அழைத்து சென்றார். இந்த சிறுவன் தான் பிற்காலத்தில் பல கீர்த்தனை பாடல்கள் எழுதிய வேதநாயகம் சாஸ்திரியார் ஆவார்.
சுவாட்ஸ் ஐயர் பாளையங்கோட்டை சபையின் பொறுப்பை சத்தியநாதன் என்பவரிடம் ஒப்படைத்தார். குலோரிந்தா அம்மையார் அவரோடு பெருந்தன்மையாக ஒத்துழைத்தார். சத்தியநாதன் அங்கிருந்த தமிழ் கிறிஸ்தவர்களையும், குலோரிந்தாவினால் உருவாக்கப்பட்ட பள்ளியையும் தினமும் மேற்பார்வை செய்தார் என்று தெரிகிறது.
தொடரும்
*By Sujith Rex*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory