புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி - 4

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பகுதி - 4*
கடந்த பதிவில் திருநெல்வேலி திருமண்டலதின் முதல் சபையின் பதிவேட்டை பற்றிய குறிப்புகளை கண்டோம். அதன் தொடர்ச்சி..
தஞ்சாவூரில் இருந்த பேராயர் கால்டுவெல் 40பேர் பெயர் கொண்ட ஒரு பதிவேட்டினை தயார் செய்திருந்தாலும் திருநெல்வேலிக்கு என்று தனி போதகர் இல்லை . எனவே *1783* ஆம் ஆண்டு குளோரிந்தா அம்மையாரும் சபையில் இருந்த இருவரும் சேர்ந்து ஒரு போதகரை கொண்டு வர தஞ்சாவூர் சென்றனர் .அப்போது அங்கு கணம் சுவாட்ஸ் ஐயர் அங்கு இருந்தார். அங்கு இரண்டுமாதம் காத்திருந்து ஒரு ஊக்கம் இல்லாத ஒரு சபை போதகரை கூட்டி கொண்டு வந்தனர். அவரது பெயர் *விசுவாசி* . விசுவாசி என்ற அவர் தரங்கம்பாடி திருவிடைபணியாளரால் அனுப்ப பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கணம் சுவாட்ஸ் ஐயர் தஞ்சாவூர்க்கு சென்றபோது *ஞானபிரகாச ராயப்பன்* என்ற தம் சபை ஊழியர் ஒருவரை பாளயங்கோட்டை திருச்சபைக்கு 1784 ஜூலையில் அனுப்பினார். இவரின் அறிக்கைகள் சுவாட்ஸ் ஐயருக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது.
இந்த நேரத்தில் திருநெல்வேலி சபையானது 51 உறுப்பினரை கொண்ட திருச்சபையாக மாறி இருந்தது.இந்நிலையில் கடம்பூர் அருகில் உள்ள *ஒட்டரம்பட்டியில்* 30 கிறிஸ்தவர்கள் இருந்தனர். அதுபோல *தேரிவிளையில்* 24 கிறிஸ்தவர்களும் இருந்தனர். இந்த நிலையில் குளோரிந்தா அம்மையார் பாளையங்கோட்டையில் தேவாலயத்தை கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
*தேவனுடைய பணியை செய்பவற்கு தேவனே துணை* என்ற மாதிரி கோட்டையின் படைத்தளபதிகளில் ஒருவன் ஆலயம் கட்ட சுண்ணாம்பு, தேவையான கட்டிட பொருட்களை அளித்தான். இவ்வாறு அந்த இடத்தில் ஆலயம் உருவாக தொடங்கியது.
1785 ஜனவரியில் சுவாட்ஸ் ஐயர் திருச்சியில் வால்ந்த *சத்தியநாதன்* என்பவரை திருநெல்வேலிக்கு அனுப்பினார். இந்த சத்தியநாதன் என்பவர் தஞ்சாவூரின் அருகே உள்ள வல்லத்தில் பயிற்சி பெற்ற கணம் சுவாட்ஸ் ஐயரின் நம்பிக்கைக்குரிய ஊழியர் ஆவார். சத்தியநாதன் திருநெல்வேலிக்கு வந்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள சபையையும், அந்த சிறு மந்தையான கூட்டத்தையும் பார்த்து பூரிப்பு அடைந்தவாறு திருநெல்வேலியை விட்டு கிளம்பினார்.
அவர் சென்ற கையோடு குளோரிந்தா அம்மையாரின் ஆலய கட்டுமான முயர்ச்சியையும், அதை பிரதிஷ்டை செய்வதற்கான குளோரிந்தா அம்மையாரின் அலைப்பையும் அவருக்கு கொடுத்தார். இதை கேட்ட சுவாட்ஸ் ஐயர் இன்ப வெள்ளத்தில் *மகிழ்வுற்றார்* ..
இதற்கு பின்பு ......
தொடரும்
*Collected By Sujith Rex*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory