புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019 பகுதி -- 3

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019 பகுதி -- 3*
முந்தய பதிவில் ஞானஸ்நானம் பெறவந்த குலோரிந்தாவுக்கு சுவாட்ஸ் ஐயர் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்ததை பார்த்தோம். அதன் தொடர்ச்சி...

அவர் திருநெல்வேலி வந்த பொது குலோரிந்தா மறுபடியும் அவரிடம் வந்து ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டார். வளர்ந்து வரும் திருச்சபைக்கு இன்றியமையாதவளாலும், பெருமதிப்பிற்கு உரியவளாகவும் குலோரிந்தா விளங்கியதை சுவாட்ஸ் ஐயர் பிறர் வாயினால் அறிந்தார். பிற மதத்தினை சார்ந்தவர்களையும் கிறிஸ்தவத்திற்கு இழுத்து கொள்ளும் தன்மை பெற்றவளாக குலோரிந்தா அம்மையார் விளங்கியதால் , திருநெல்வேலி திருமண்டல திருச்சபையின் தாயாக அமையும் குலோரிந்தா அம்மையாருக்கு *3- 3- 1778* அன்று ஞானஸ்நானம் கொடுத்தார் சுவாட்ஸ் ஐயர்.
இது அம்மையாருக்கு ஒரு உற்சாகத்தை ஊட்டியது. இதன் பின்பாக குலோரிந்தா அம்மையார் உற்சாகமாக நற்செய்தியை பரப்ப ஆரம்பித்தார்.
அவருடைய வீடு பிற சமயத்து பெண்கள் நற்செய்தியை அறியும் இடமாயிற்று.
1779 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திருநெல்வேலிக்கு வந்த தரங்கம்பாடி நற்செய்தியாளர்களும், அங்குள்ள இந்திய போதகர் *பிலிப்பு* என்பவரும் நெல்லையில் காணப்படும் கிறிஸ்தவத்தின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தவர் குலோரிந்தா அம்மையார் என்பவர் என்று அறிவித்தனர்.
சுவாட்ஸ் ஐயரின் உதவியாளர் *போல்* (Poal) என்பவர் 1779 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாளையங்கோட்டைக்கு வந்த பொழுது குலோரிந்தாவின் செயல்கள் உள்ளத்தை கவர்ந்தது என்று குறிப்பிடுகிறார்.
1779 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் குலோரிந்தா அம்மையாரின் 30 வயதான வேலையாள் ஒருவனுக்கு யோவான் என்று ஞானஸ்நானம் கொடுத்ததோடு, அவளுடைய வளர்ப்புமகள் மரியம்மாளுக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இவ்வாறு கிறிஸ்தவ திருமணங்கள் நடைபெற்றதாலும், போதுமான ஞானஸ்நானம் கொடுத்த நபர்கள் இருந்ததாலும் திருநெல்வேலி சபை தொடங்கிற்று.
ஆனாலும் திருநெல்வேலி திருமண்டத்தின் வரலாறு என்பது *1780* ல் இருந்து தான் தொடங்குகிறது என்பதை அறிவோம். அதற்கு காரணம் அப்போது தான் பாளையங்கோட்டையில் முதல் ஆலயம் உருவேடுத்த்தது. மேலும் பாளையங்கோட்டையை சார்ந்த குலோரிந்தா என்ற பெண்மணியை முதலாக கொண்ட 40 [பெயர்கள் அடங்கிய முதல் பதிவேட்டை பேராயர் *கால்டுவெல்* முதன் முதலாக தஞ்சாவூரில் இருந்து உருவாக்கி கொடுத்தனர்.
இதில் குறிப்பிடதக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில் *_திருநெல்வேலி திருச்சபை தனது சொந்த ஆற்றலில் தான் இயங்கியது_ .*
*எதையும் சாராமல் கிரிஸ்துவே பெலன் என்று தொடங்கிய ஒரு சிறு சபை தான் இன்று பிரமாண்டமாய் இருக்கும் திருநெல்வேலி திருமண்டலம்..*
*உங்களுக்காக முதல் சபையில் இருந்தவர்களின் பெயர் பட்டியல்*
இதில் உள்ள சிறப்பு என்னவெனில் குளோரிந்தா ஆரம்பித்த சபையில் 40 பேரில் 13 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
*அந்த நாற்பது பெயர்கள்.*
1 ) குளோரிந்தா பிராமண சாதி
2 ) சாராள்
3 ) ஹென்றி லிட்டில்டன்
4 ) யோவான்
5 ) மனைவி மரியம்மாள்
6 ) மகள் சூசன்னா
7 ) மகள் கிறிஸ்டினா
8 ) தாவீது
9 ) சாலொமோன்
10 ) பாஸ்கல்
11 ) மனைவி பாலி
12 ) மகன் சாமுவேல்
13 ) தாவீது வடுகர் சாதி
14 ) மனைவி பட்டி
15 ) பிச்சை முத்துப் பண்டிதர் - சலவைத் தொழிலாளி சாதி
16 ) நாகல நாயக்கர் , வலங்கை மறித்தான் - பறையர் சாதி
17 ) ஞானமுத்து ஈழவர் சாதி
18 ) மாசிலாமணி பிள்ளை
19 ) ஞானமுத்து சவளக்காரன்
20 ) நல்லதம்பி ஆசாரி - தச்சர்
21 ) தேவசகாயம் பிள்ளை - திருநெல்வேலி நகர்
22 ) மனைவி ஞானப்பூ
23 ) மகள் சூசையம்மாள்
24 ) மகன் வேதநாயகம் ( வேதநாயகம் சாஸ்திரியார் )
25 ) மகள் பாக்கியம்
26 ) மகன் சுவிசேஷமுத்து
27 ) ஞானப்பிரகாசம் செட்டியார்
28 ) குருபாதம் ஆசாரி
29 ) அக்காயி - பிச்சைக்காரி
30 ) ராயப்பன் - குதிரைக்காரன்
31 ) ராயப்பன் - பள்ளர் சாதி
32 ) ராயப்பன் - மறவர் சாதி
33 ) *🤔*- - பிராமண சாதி
34 ) மகள் பெட்ஸி வாலிமூர்
35 ) வளர்ப்பு மகன் சாமுவேல்
36 ) வேலைக்காரி - சின்னம்மாள்
37 ) மகன் ராயப்பன்
38 ) மகள் சவரியம்மாள்
39 ) சுவாமிதாசன் - பணிக்கர் சாதி
40 ) பாக்கியநாதன் - சவளக்காரன்
*Collected By Sujith Rex*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory