புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019* *Part -2

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019* *Part -2*
கடந்த பதிவின் தொடர்ச்சி
திருநெல்வேலி திருமண்டலத்தின் முதல் முழுக்கு ஞானஸ்நானம் *இலக்சுமணன்* என்னும் ஞானபிரகாசமும் அதனை தொடர்ந்து *சவரிமுத்து* என்போரும் என்பதை பார்த்தோம். இவ்வாறு தனி தனி மனிதர்களாக ஞானஸ்நானம் எடுத்திட மறுபடியும் இது தொடர்கிறது.
தஞ்சை சபையில் திருநெல்வேலியை சார்ந்த *வள்ளலா* என்னும் என்னும் *சாமுவேல்* என்ற 18 வயது வாலிபன் அக்டோபர் மாதம் முன்றாம் நாள் 1773 ஆம் திகதி திருமுழுக்கு எடுத்ததாக அச்சபை பதிவேட்டில் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இவரது அண்ணன் *மெய்யப்பன்* என்பவர் என்பவரும் இவருக்கு முன்பாக ஞானஸ்நானம் எடுத்துள்ளதும் பதிவாகி உள்ளது.
இதை தவிர்த்து முதன் முதலாக 1778 ஆம் ஆண்டு சுவாட்ஸ் ஐயர் திருநெல்வேலியை நோக்கி பயணம் செய்து வரும்போது தச்சநல்லூர் என்னும் இடத்தில் 50 ல் இருந்து 60 பேர் வரையிலான ஒரு சிறு கூட்ட மக்கள் தேவனை ஆராதனை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். அவர்கள் தலித்துகாலாக இருந்தாலும் ஐரோப்பிய ராணுவ சீருடை அணித்து இருந்ததாக குறிபிடுகிறார். ( பெரும்பாலும் அவர்கள் ரோமன் கத்தோலிக்கத்தை சார்ந்தவர்களாக இருக்க கூடும்)
இதன் பிறகு தான் உலக வரலாற்றில் தனக்கேது சிறப்பு மிக்க இடத்தை பெற்றுள்ள திருநெல்வேலி திருமண்டலம் உருவாக ஆரம்பிக்கிறது.
1778 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுவாட்ஸ் ஐயர் பாளையங்கோட்டையின் சிறிய கிறிஸ்தவ சமுதாயத்தை பார்வையிடவும்., ஆங்கிலேயர் ஒருவரின் திருமணத்தை நடத்தவும், பல குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் பாளையங்கோட்டை வந்தார். அந்த வேளையில் தான் *குலோரிந்தா* என்னும் இளம் பிராமண பெண் ஞானஸ்நானம் பெறவேண்டி அவரிடம் வந்து நின்றார்.(அவரது அவர் முன்பே சுவாட்ஸ் ஐயருக்கு அறிமுகம் ஆனவர். எப்படின்றால் லிட்டில்டன்என்னும் ஆங்கிலேய படை அதிகராரி ஒருவரோரு தொடர்பு கொண்டு கிறிஸ்துவை அறிந்த குளோரிந்தா, சுவாட்சு ஐயர் தஞ்சை வந்த பொது ஞானஸ்நானம் பெற விரும்பியும், அவரால் மறுக்கப்பட்டவள். அந்த ஆங்கிலேய தளபதி சூலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். தான் நோயுற்ற காலத்தில் தன்னை உண்மையாய் பராமரித்து பேணின குலோரிந்தாவுக்கு தன்னுடைய சொத்துக்களை விட்டு சென்றான்.
உண்மைக்கும், உதவிக்கும் பெயர்போன குலோரிந்தாவுக்கு தெரியாது அவள் தான் இந்த தொடக்கமானவள் என்று..... தொடரும் ..
*Collected By Sujith Rex

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory