புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019 Part -1

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770- 2019* Part -1
திருநெல்வேலி திருமண்டலம் பற்றிய வரலாற்று செய்திகளை பலர் பலவிதமாய் தொகுத்து எழுதினாலும் எனக்கு அதை பற்றி எழுத மிகுந்த ஆர்வம் உண்டு. பல நாட்களுக்கு பிறகு இதை எழுதுகிறேன்.
இந்திய மண்ணில் கிறிஸ்தவம் என்ற ஒன்றை பல விதங்களில் விதைப்பதிற்கும், அதை பெருக்குவததிற்கும் முக்கிய பங்கு வகித்தது இந்த திருமண்டலம். இங்கிலாந்தில் உள்ளவர்களும் திருநெல்வேலி திருமண்டலத்தை தங்களின் தங்கள் தாய்நிலத்திற்கு இடாக பேசிய வரலாறு கொண்டது. அற்பமான சிலரை கொண்டு அற்புதமாய் கட்டமைத்து தற்போது அழிக்க முடியாத மரமாய் மாறியுள்ளது நம் திருமண்டலம். அழிக்க கூடிய மாந்தர்கள் வந்தாலும் அவர்களுக்கும் நன்மை செய்து இறைவனின் அருளால் இன்றளவும் நிலைத்து நிற்கும் இத்திருமண்டலம் சிறப்பிற்க்குரியதே.
நமக்கு எல்லாம் பொதுவாய் தெரிந்தது கிறிஸ்தவம் முதன்முதாலாய் குளோரிந்தா சபையில் இருந்து தான் ஆரம்பித்தது என்று... ஆனால் அதற்கும் பத்து வருடங்களுக்கு முன்பே திருநெல்வேலியில் முதல் கிறிஸ்தவன் எழும்பிவிட்டான் என்பதே உண்மை. 1770 ஆம் ஆண்டில் பல தென் மாவட்டத்தை சார்ந்த வணிகர்கள் திருச்சி சென்று வணிகம் செய்து கொண்டிருந்தனர். இவ்வாறு வணிகம் செய்யும் வணிகர்கள் பலர் மனம் மாறி கிறிஸ்தவத்தை ஏற்று கொள்வது வழக்கம். 1770 ஆகஸ்ட் 10 ஆம் நாள் திருநெல்வேலியினை சார்ந்த *இலக்சுமணன்* என்னும் 20 வயது வாலிபன் ஞானஸ்நானம் எடுத்ததாக திருச்சி ஆலய பதிவேட்டில் உள்ளது. *இலக்சுமணன் என்னும் வாலிபர் ஞானபிரகாசமாக* மாறியதே திருநெல்வேலி திருநெல்வேலி திருமண்டத்தின் முதல் கிறிஸ்தவ ஆரம்பம்.
சுவாட்சு ஐயரின் 1771 ஆம் ஆண்டின் குறிப்பேட்டில் (Journals) இரண்டாம் படியாக திருநெல்வேலி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. அதில்
“ *திருச்சியில் இருந்து 200 மைல்களுக்கு அப்பால் உள்ள கோட்டையும், முக்கிய பட்டணத்தில் ஒன்றாகிய பாளையங்கோட்டையில் நமது கிறிஸ்தவ அங்கத்தினர் ஒருவர் வாழ்கிறார். அவர் பெயர் சவரிமுத்து. வேதத்தை நன்கு படிப்பவர், ஆங்கிலேய தளபதி மனைவி இந்த பணியை செய்துள்ளார்* ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிதறிய தனிமனிதர்களின் ஆரம்பமே திருநெல்வேலி திருமண்டலம் தொடங்க விதையாய் மாறியது எனலாம். To be continued …
*By Sujith rex*
1.1.2019
*Collected from Historical books .*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory