புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இக்னேஷியஸ் லயோலா

*இயேசு சபையை ஆரம்பித்த இக்னேஷியஸ் லயோலா*

1552ம் ஆண்டு மே 3ம் நாள் ஸ்பெயின் தேசத்தின் கோட்டையில் துப்பாக்கி ஏந்தியவராக நின்று கொண்டிருந்தார் இக்னேஷியன், பிரஞ்சுப் படையின் அதிரடித் தாக்குதல் திரெனத் தொடர்ந்தது .

எதிரிகளின் துப்பாக்கிக் குண்டு ஒன்று அவர் காலை பதம் பார்க்க முடவரானார் .

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் புனிதர்களின் வரலாற்றைப் படித்ததினால் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது .

தன் வாழ்வை திருப்பணிக்கு அர்ப்பணித்தார் .

இறைவனின் மிகப்பெரும் மகிமைக்காக உழைக்க வேண்டும் என்பது அவரது அசைக்கமுடியாத குறிக்கோளாக மாறியது .

மன்ரேசா என்ற குகையில் தங்கித் தவ முயற்சிகளை மேற்கொண்டார் .

தாம்வெற்றி கண்ட ஞான முயற்சிகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தார் .

முழுமையான மாற்றத்திற்குப் பின் ரோம் நாட்டிற்குச் சென்று 11 ஆண்டுகள் இலத்தீன் மொழியைக் கற்றார் .

ஏழ்மை , கற்பு ஆகிய இரு வார்த்தைகளின் அடிப்படையில் *இயேசு சபை* என்ற துறவறத்தை ஆரம்பித்தார் .

கீழ்ப்படிதல் இச்சபையின் அச்சாணியாகக் காணப்பட்டது 1002 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அச்சபை இன்று ஏறத்தாழ 27 , 000 உறுப்பினர்களைக் கொண்டு உலகங்கிலும் செயல்பட்டுவருகின்றது இக்னேஷியஸ் , தவறி விழுந்த பெண்களுக்கு இல்லம் அமைத்தும் , நோயுற்றோரை பராமரித்தும் , தியானங்களை கற்றுக் கொள்ளும் பாமரருக்கும் படித்தோருக்கும் போதனைகள் செய்தும் அநேகரை ஆண்டவருக்குள் வழிநடத்தினார் .

இறைவனுடன் உறவாடி , கவலைகளை முற்றும் மறந்து அமைதியில் என்றும் நிலைத்து நின்று எண்ணிறந்த புதுமைகளைச் செய்த இவர் இதே நாள் ஜூலை 31 , 1556ம் ஆண்டு நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார் .

-

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory