புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மீயகான் பள்ளி திருச்சபை

*மீயகான் பள்ளி திருச்சபை வரலாறு*

மீயகான் பள்ளி கொங்கராயர் குறிச்சி சேகரத்திற்கு உட்பட்டது .

கொங்கராயர் குறிச்சி , தாமிரபரணி ஆற்றுக்கு வடகரையிலுள்ள அழகு கிராமம் , அது 1824 ஆம் ஆண்டில் தோன்றிய புராதன சபை ,

மீயகான்பள்ளியின் பழைய பெயர் நாணல் காடு என்பதாகும்.

மக்கள் ஆற்றுக்கு அருகில் குடியிருந்தனர் .

1869 இல் பண்ணைவிளை வட்டத்திற்குள்ளும் , பின்பு கொங்கராயர் குறிச்சி சேகரத்திற்குள்ளும் இருந்துவரும் சிறு சபை மீயகான்பள்ளி.

முதல் கிறிஸ்தவர் வேதநாயகம் என்ற சுப்பையா .

இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனதால் புறமதத்தினரின் நெருக்குதலும் , துன்பங்களும் அதிகமாயின .

ஆற்று வெள்ளத்தாலும் அடிக்கடி வீடுகள் சேதமாயின . எனவே , யோர்தான் போன்று ஆற்று வளமிக்க இடத்தைவிட்டு ஊருக்கு வடக்கே சிறு மலைகளும் , பாறைகளும் அதிகமாயிருந்த இடத்திற்கு வந்தனர் .

அவர்கள் குடியிருக்கத் தேர்ந்தெடுத்த இடம் சிவசுப்பிரமணியம் என்பாருக்குச் சொந்தமானது .

எனவே சிவசுப்பிரமணியபுரம் என்று அழைத்தனர் .

அதன் பக்கத்தில் இசுலாமிய குடியிருப்பான மீயகான்பள்ளி என்ற ஊர் ஏற்கெனவே இருந்தது .

அந்தப் பெயரே கிறிஸ்தவக் குடியிருப்புக்கும் நிலைத்துவிட்டது .

கூரைக் கோயில் காரைக் கோயிலாகி 1947 ஆகஸ்ட் 22 இல் தூய பவுலின் ஆலயம் என்ற பெயரில் செல்வின் பேராயரவர்களால் அருட்பொழிவு பெற்றது .

இப்பொழுது நாற்பது குடும்பங்களைக் கொண்ட மிகுந்த உற்சாகமான சபையாக இயங்குகிறது .

இவ்வூருக்கு வடக்கே சிறிது தொலைவில் நெல்லை - தூத்துக்குடி பெரிய ரோடு செல்கிறது .

பக்கத்தில் ஒரு விவசாயக் கல்லூரி அவதாரமெடுத்துள்ளது.

நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ மலைகளும் , பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம் என்ற வேத வாக்கு இவ்வூரில் நிறைவேறுகிறது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory