புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

முதலூர் கோபுர முடிசூட்டு விழா

*கோலாகலமாக நடந்த முதலூர் கோபுர முடிசூட்டு விழா*

நெல்லைச் சீமையில் உள்ள உயர்ந்த கோபுரங்களில் ஒன்று முதலூர் கோபுரமாகும் .

இது 1929 ஆம் ஆண்டு 216 அடி உயரத்தில் கட்டப்பட்டது .

கோபுர கட்டுமான வேலை 1926 இல் ஆரம்பமானது .

மக்கள் விருப்போடும் , விறுவிறுப்போடும் வேலை செய்தனர் .

பொந்தன் கிணற்றுப் பக்கம் வெட்டி எடுக்கப்பட்ட கனம் இல்லாத வெள்ளைக் கற்களால் இக்கோபுரம் கட்டப்பட்டது .

பன்னம்பாறை ஆசாரிமார்களும் , முதலூர் மக்களும் சேர்ந்து கற்களை செப்பம் செய்தார்கள் .

செக்குகள் போன்ற பெரிய தொட்டிகளில் சாந்துகளை மாப்போல அரைத்துத் தள்ளினார்கள் .

சாரம் கட்டக் கயிறுகள் கொழும்பிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டன .

கோபுரம் ஊசிபோன்று ஆகிவிடாதபடி ஐந்து பெரிய கற்களை உச்சியில் அழகாக அமைக்கத் திட்டமிட்டார்கள் .

இந்தக் கற்களுக்கு கிரீடக் கற்கள் என்று பெயர் சூட்டினார்கள் .

கிரீடக் கல்லை மேலே ஏற்றும் நாளை சபை முழுவதும் கூடி விழா எடுத்தார்கள் .

ஒன்றரைப் பவுணில் ஒரு தங்கச் சிலுவை செய்தார்கள் .

ஆலய மணி ஒலிக்க , மேள வாத்தியங்கள் முழங்க , வாண வெடிகள் விண் அதிர , வாலிபர்கள் களியல் சிலம்பம் ஆட , பெண்கள் சந்தனக் கிண்ணத்துடன் சங்கீதம் பாட , பெரியவர்கள் வட்டத்தார் கட்டி , தலை இடை தோள்களில் நான்கு அங்கவஸ்திரங்கள் அணிந்து ஆடி மகிழ்ந்தார்கள் .

தங்கச் சிலுவையை கிரீடத்தின்மீது பதித்தபோது 12 குடம் தண்ணீரால் நீராட்டி லாசர் ஐயர் ஆசீர்வதிக்க கிரீடம் கப்பி மூலம் கோபுரத்தில் ஏறியது .

கோபுர முடிசூட்டுவிழா கோலாகலமாக நடந்தது .

--

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory