புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -14

நெல்லை அப்போஸ்தலனின் வருகை
திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -14
CMS 1799ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.துணிச்சலான இரு ஜெர்மானிய இளைஜர்கள் ரேனியஸ் மற்றும் ஸ்னார் என்பாரும் 1815 ஜனவரியில் CMS சார்பாக சென்னை மாநில அதிபரை சந்தித்து அவரின் உதவியால் கறுப்பர் பட்டணத்தில் தனது ஊழியத்தை தொடங்கினர்.
இதற்க்கு முன்பு தரங்கம்பாடியில் ஐந்து வருடம் தமிழ் கற்று தேர்ந்து இருந்தனர். இதனிமித்தம் மிகத்துரிதமாக சென்னையிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் பள்ளிகளையும் சபைகளையும் நிறுவ எதுவாக இருந்தது. அங்கு காணப்படும் தேவ வார்த்தையின் தேவை காரணமாக ரேனியஸ் 1815 இல் வேதாகமத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை தொடங்கிஇருந்தார்.
1817 நவம்பர் 5 ஆம் நாள் சென்னை வேதாகம சங்கத்தினை நிறுவினார். துண்டு பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் உணர்ந்த ரேனியஸ் 29-9-1818 ஆம் ஆண்டு சென்னை துண்டு பிரச்சார சங்கத்தை ஏற்படுத்தினார்.
திருநெல்வேலிக்கு ஒரு மிசனரி வேண்டும் என்று ஹாப் ஐயர் வேண்டுதல் விடுத்திருந்தார். அவரின் அழைப்புக்கு ரேனியசை அனுப்ப தீர்மானித்தனர்.5 ஆண்டு காலமாகக அவர் சந்தித்த நம்பிக்கை துரோகங்கள், அவர் வளர்த்த சபை, சபை மக்கள் என்று அனைத்தையும் விடுத்து செல்ல அவருக்கு சிரிது மனம் வருத்தம். ஆனால் அவருக்கு தெரியவில்லை.
தேவன் அவருக்கு மகா பெரிய ஜனக்கூட்டத்தை வழிநடத்த போகும் பொறுப்பை கொடுக்கிறார் என்று. கிறிஸ்தவ உலகின் மிகப்பெரிய சபை அவரின் வருகைக்காக காத்து கொண்டிருந்தது.
7-6-1820 ஆம் ஆண்டு தம் மனைவி மக்களுடன் திருநெல்வேலி வந்து சேர்ந்தார்.ஹாப் ஐயர் அவரை வரவேற்று கோட்டையில் அவருக்கு தங்க வீடு ஆயத்தம் பண்ணியிருந்தார்.
ஹாப் ஐயர் பாளையங்கோட்டை பெரிய ரஸ்தாவில் விலை மதிப்புடைய சொத்துக்களை வாங்கினார். அதில் பள்ளிக்கூடம் செமினரி, பங்களா ஆகியவற்றை கட்டியிருந்தார். ரேனியஸ், ஸ்மித் ஆகியோர் CMS சங்கத்திற்காக அதை வாங்கினர் சில மாறுதல்களுடன் அந்த இடம் மறுதிறப்பு செய்யப்பட்டது. அந்த இடத்தில் உள்ள இந்த கட்டடங்கள் தான் தற்போதைய பரி. திருத்துவ அத்தியாச்சாலயம், அதன் அருகில் உள்ள கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, மேரி சார்சென்ட் மேனிலைப்பள்ளி ஆகும்.
ரேனியஸ் தேவ அழைப்பின் படி தெரிந்துகொள்ளப்பட்டு திருநெல்வேலிக்கு வந்து ஊழியம் செய்தார், அவர் இங்கு அடைந்த மகிழ்ச்சி, வெற்றிகள் ஏராளமாயினும் அவர் சந்தித்த தோல்விகளும், அவரை சுற்றி நடந்த நம்பிக்கை துரோகங்களும் ஏராளம். ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டில் கடைசி வரை மாறவில்லை. அவரின் வாழ்க்கை மாதிரி நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். அந்த காலத்திலேயே அவர் சந்தித்த நிர்வாக பிரச்சினைகள் அதற்க்கு அவர் எடுத்த முடிவுகள் என்று பல விஷயங்கள் பல கோணங்களில் நமக்கு வழிகாட்டும்.
தொடர்ந்து CMS ஆற்றிய பணிகள் பற்றியும் ரேனியசின் பணிகளில் குறிப்பிடத்தக்க பணிகளையும் காணலாம்.
தொடரும்
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory