ஊழியத்திற்காக கடந்து செல்லும் மனிதர்களின் கவனத்திற்கு......
ரேனியஸ் செத்துவிட்டான்
ரேனியஸ் ஐயர் தன்னை தனது ஊழியத்திற்கு என்று தயார் செய்யும் போது அவர் குடும்பத்தாரோடு ஏற்பட்ட மனக்கசப்புகள்.
(இதில் அவர் பேசுவது போல நான் அப்படியே கொடுக்கிறேன். ஏன் என்றால் இது போன்ற வார்த்தைகள் ஊழியத்திற்கு என்று கடந்து சென்றவர்களை பெலப்படுத்தும் என்று விசுவாசிக்கிறேன்.)
ரேனியஸ் ஐயரின் வார்த்தைகள்
“அம்மாவை, உடன்பிறப்புக்களை, குடும்பத்தினரை விட்டு விட்டு வெளி தேசங்களுக்கு செல்வது முட்டாள்தனமான செயல்தான்.
என் குடும்பத்தினர் எனக்காக அழும்போது, எனது இந்த செயல்களை குறித்து கண்ணீர் சிந்தும் போதும் கண்டிப்பாக நானும் அழதான் வேண்டும். ஊழியத்தை குறித்த அவர்களின் எண்ணம் எனக்கு நிச்சயமாக சோதனை தான். ( அவரது குடும்பத்தினர் அவரை உள்ளுரில் ஊழியம் பார்க்க சொன்னனர்).
என் குடும்பத்தினர் எனக்காக அழும்போது, எனது இந்த செயல்களை குறித்து கண்ணீர் சிந்தும் போதும் கண்டிப்பாக நானும் அழதான் வேண்டும். ஊழியத்தை குறித்த அவர்களின் எண்ணம் எனக்கு நிச்சயமாக சோதனை தான். ( அவரது குடும்பத்தினர் அவரை உள்ளுரில் ஊழியம் பார்க்க சொன்னனர்).
ஆனாலும் நான் மிகவும் நேசிக்கிற என் அம்மாவை, உடன்பிறப்புக்களை பிரிவது தான் கஷ்டமாக உள்ளது ஆனாலும் “ தகப்பனையாவது, தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு பாத்திரன் அல்ல என்ற தேவ வசனத்தின் நினைப்புடன் கடந்தேன்.
(சிறிது காலம் கழித்து)
ஏனோ சோகமாக உணருகிறேன், என் அப்பாவின் விட்டை விட்டு வந்த நினைவுகள், என் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நான் இருந்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம் என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறது.
அம்மாவிடம் இருந்து வந்த கடிதத்தில் அம்மா எப்போதும் என்னை கண்ணீரோடு நினைவு கூறுகிறார் என்றும், என்னுடைய இந்த நடத்தை முட்டாள் தனமானது என்றும், மற்றவர்களிடம் தன்னை பற்றி சொல்லும் போது ரேனியஸ் செத்துவிட்டான் என்று சொல்வதும் என் மனதினை வாட்டியது. அனால் தேவன் என்னை எதற்கோ பயன்படுத்த போகிறார் என்ற உணர்வு என்னை வழிநடத்தியது.
இந்த வார்த்தைகளை ஊழியத்திற்காக கடந்து வந்த ஒவ்வொரு ஊழியரும் அனுபவித்து இருப்பார்கள். ஒவ்வொரு சிறந்த ஊழியகாரரும் இது போன்ற சோதனைகளை கடந்து வந்திருப்பர்.
Sujith Rex (@iamsujithrex)
Sujith Rex (@iamsujithrex)
No comments:
Post a Comment