ஆத்தும அறுவடை வீரர் சாராள் டக்கர்
சேவை செய்வதற்கு ஊனம் ஒரு தடையேயில்லை , மனமிருந்தால் மார்க்கம் உண்டு ' என்பார்கள் . ஆம் .
நமது நல்ல எண்ணங்களும் , நல்ல செயல்களுமே பிறர் வாழ்வை உயர்த்தும் உன்னத கருவிகளாகும் .
1887ஆம் ஆண்டு ஜான் டக்கர் என்ற மிஷனெரி பாளையங்கோட்டையில் பணிபுரிந்து கொண்டிருந்தார் .
இவர் ஆத்தும் அறுவடை வீரர் .
தன் சொல் , செயல் அனைத்திலும் இயேசுவைப் பிறருக்குக் காண்பித்து , மக்களைநற்செய்தியின் பாதையில் நலமாக வழிநடத்திக் கொண்டிருந்தார் .
இவருக்கு ஒரு சகோதரி . பெயர் சாராள் டக்கர் . கால் ஊனமுற்றவர் . கால் ஊனமே தவிர , மனம் ஊனமில்லை . - இவரைச் சுற்றிலும் எப்பொழுதுமே தோழிகள் பட்டாளம் நிறைந்திருக்கும் .
ஏனெனில் இவர் அன்புடன் பேசும் வார்த்தைகளை அவர்கள் தம்மை மறந்து கேட்டுக் கொண்டிருப்பர் .
தேன் சொட்டும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் .
கருணையே நிறைந்தவர் . ஒருநாள் ஜான் டக்கர் தன் சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினார் .
அக்கடிதத்தில் , " தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியறிவு இல்லாமல் நாயிலும் , பேயிலும் மிகவும் இழிவாக நடத்தப்படுகிறார்கள் . அவர்களின் அவல நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை " என்று குறிப்பிட்டிருந்தார் .
சாராள் டக்கர் இக்கடிதத்தைத் தன் தோழிகளுக்கு வாசித்துக் காட்டினார் .
தோழிகள் அனைவரும் சாராளின் தீர்மானத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் .
அனைவரும் முழங்காற்படியிட்டனர் .
தமிழ்நாட்டுப் பெண்களின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்தனர் .
தங்கள் வருமானத்தின் பகுதியை இம்மக்களின் நலனுக்காக செலவிட தீர்மானித்தனர் .
இவர்கள் தீர்மானத்தில் பேரிடி விழுந்தது .
அந்தோ ! அவ்வருடமே சாராள் டக்கர் இவ்வுலகம் விட்டுவிண்ணகம் சென்றார் .
சிநேகிதிகள் கூடினர் . அழுவதற்குப் பதில் ஆர்வம் கொண்டனர் .
268 பவுன் 17 சில்லிங் பணம் சேர்ந்தது .
ஜான் டக்கர் ஐயருக்கு அனுப்பி வைக்கப்பட்டது . “ சாராள் டக்கர் ஸ்தாபனம் உருவானது .
இன்றும் திருநெல்வேலியில் அநேக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் , ஆசிரியர் பயிற்சிப்பள்ளி இதனால் உருவானது .
------------------------------------------------------------
No comments:
Post a Comment