புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலம் - திருச்சபை அடையாளங்கள்

சபையின் ஆல்டர் பகுதிக்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு நீங்கள் இதை கவனித்து இருக்கிறீர்களா?
திருநெல்வேலி திருமண்டலம் - திருச்சபை அடையாளங்கள்
Alter Table (ஆல்டர் டேபிள் )
இந்த மேசையானது ஆல்டர் பகுதியின் நடுபகுதில் அமைந்திருக்கும்.இந்த பகுதியில் வைத்தே கர்த்தரின் திருவிருந்து கொடுக்கப்படும். நாம் இதை உற்று நோக்கினால் இது மற்ற சாதாரண மேசை போல் இல்லாமல் சற்று உயரமாக அமைத்திருக்கும். மேலும் குருவானவர்கள் நிற்பதற்கு வசதியாக இடைவெளி விட்டும் அமைத்திருக்கும். இதன் உயரம் பொதுவாக 36 லிருந்து 40 இன்ச் வரை இருக்கும் அகலம் இடத்திற்குதக்கதாக மாறுபடும். மேசையின் மேல் பகுதி மென்சா (Mensa) என்று அழைக்கப்படுகிறது. மற்றும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஏற்பட்ட ஐந்து காயங்களை நினைவுபடுத்தும் விதமாக இந்த மேசையில் ஓரத்திலும், நடுவிலுமாக கண்டிப்பாக 5 சிலுவை அடையாளங்கள் பொறிக்கபட்டிருக்கும். இந்த மேசை கல்லினலாவது அல்லது மரத்திலாலவது ஒழுங்கும் நேர்த்தியுமாக செய்யபட்டிருக்கும்.
உங்களின் சபையில் உள்ள ஆல்டர் டேபிளை மறுபடியும் காணும் போது இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்களை நினைவு கூறுங்கள்.
இதை நீங்கள் உங்களின் சபையில் உள்ள கவனித்து உள்ளீர்களா?
உங்கள் சபையின் ஆல்டர் மேசையில் வேறு ஏதேனும் தனித்துவமான அடையாளங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்..
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory