புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸிடம் இருந்து கற்று கொள்ள கூடியவைகள்

இந்துக்களிடம் ஊழியம் செய்யும் ஊழியர்களே ..
ரேனியஸிடம் இருந்து கற்று கொள்ள கூடியவைகள்..(Inclusiveness)
ரேனியஸ் ஐயர் இந்துக்களிடம் எப்படி தேவ வசனங்களை கொண்டு போய் சேர்த்தார் என்பது நமக்கு மிகவும் வியப்பை அளிக்க கூடியதே. அதில் ஒரு காரியத்தை இதில் சொல்லுகிறேன்.
ரேனியஸ் ஐயர் ஒரு பங்களாவில் தங்கி இருந்தார். அந்த பங்களா வேலைகாரர்கள் பின்புறம் ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அந்த இடம் ஒரு ஆங்கிலேயருக்கு சொந்தமான இடம் என்பதால் ரேனியஸ் நினைத்தால் அந்த வழிபாட்டு தளத்தை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம். ஆனால் அதை அவர் எப்படி அனுகினார் தெரியுமா?
(ரேனியஸ் ஐயரின் குரல்களில்)
“அவர்கள் தினமும் அந்த தெய்வத்தை வணங்குவதை கண்டேன். ஒருநாள் அந்த பூசாரி அதற்க்கு அலங்காரம் செய்யும் பொது அவரை குப்பிட்டு ரோமர் முதல் அதிகாரத்தினை காட்டி சிலைவழிபாட்டின் பின்விளைவுகளை விளக்கினேன். ஆனால் அவர் இனி எனக்கு விருப்பம் இல்லை என்றால் இங்கு வரமாட்டேன் என்று பதில் அளித்தார். நான் அவர்களை வெளியேற்ற போவது இல்லை என்று அவர்களிடம் கூறினேன். அவர்களை வெளியேற்றி விட்டு அவர்கள் என்னை விட்டு சென்று வேறு இடத்தில் வணங்குவதை விட நான் அவர்களை என்னிடத்தில் வைத்தே கூடிய விரைவில் அவர்களை தேவனிடம் திருப்புவேன்.
அவருடன் ஒரு சிறுபையன் வந்திருந்தான். அந்த தோட்டத்திலே ஒரு பள்ளிக்கூடம் தொடங்க போகிறேன் என்று சொன்னதும் சிரித்தவாறே சரி என்று சொல்லி கொண்டு சென்றனர்.”
ரேனியஸ் மக்கள் பிற மத மக்களின் உணர்வுகளை மதித்தார். ( இப்படி சொன்னால் நீங்கள் என்னை விரோதி என்று சொல்லுவிர்கள் ஆனால் இதை விட பெரிய விசயங்களை ரேனியஸ் செய்தார் அதையும் சொல்லுகிறேன்) ரேனியஸ் பிற மத மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருப்பினும் பதில் அளித்தார்.
நம் சுவிசேஷ ஊழியம் எப்படி உள்ளது. மக்களை தேவனுக்குளாக மாற்ற முயற்சிக்கிறோமா? அல்லது மதம் மாற்ற முயற்சிக்கிறோமா?
மிசனரிகளாக ஊழியம் செய்யும் பலர் நம் பக்கத்தில் உள்ளீர்கள். உங்களின் ஆலோசனைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். எங்களை உள் பெட்டியில் (Inbox) தொடர்பு கொள்ளுங்கள்.
சில Theories (Theological Part)
ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுகிறார் என்றால் வெறும் கடவுளை மட்டும் அவர் மாற்றவில்லை. அவர் தனது நம்பிக்கை, பிறர் மீது வைத்துள்ள கண்ணோட்டம், தனது சிந்தை, செயல் ஏன் உணவு பழக்கத்தை கூட மாற்றுகிறார்கள். ஒரு மத மாறகாரணம் வெறும் மனம் மாற்றத்தை தாண்டி ஒரு உற்சாகம், திருப்தி, பொருளியல் தேவைகள், சமுக அந்தஸ்து என்று பல உளவியல் காரணிகள் உள்ளது.
தேவைகள் எங்கு பூர்த்தி செய்யப்படுகிறதோ அங்கு மக்கள் இருப்பார்கள்.
கிறிஸ்தவம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்படி உள்ளதே. (உணவாகினும் சரி , ஆவிக்குரிய உணவாகினும் சரி)
தேவன் பசியுள்ளவனுக்கே ஆகாரம் அளிக்க வந்தார்
அடுத்த பதிவில் அடிப்படை மதவாதம் (Religious Fundamentalism) என்பதை பற்றி விளக்க இருக்கிறேன். அதையும் ரேனியஸின் வாழ்க்கை கொண்டே விளக்குகிறேன்.
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory