புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சின்னண்ணன் Dr . ஏர்னஸ்ட் ஃபாரஸ்டர் பேட்டன்

சின்னண்ணன் Dr . ஏர்னஸ்ட் ஃபாரஸ்டர் பேட்டன்
Dr . ஏர்னஸ்ட் ஃபாரஸ்டர் பேட்டன் 1891 - ம் ஆண்டு ஜூலை மாதம் 7 - ம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் அலோவா என்னும் ஊரில் பிறந்தார் .
மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் .
இளமைப்பருவம் முதல் கிறிஸ்தவப் பண்புகளில் தன் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டார் .
தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ்ல் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றார் .
கல்லூரி நாட்களில் மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு மிஷனெரியாக மாற முடிவு செய்தார் .
1915 - ம் ஆண்டு ஏர்னஸ்ட் தன்னுடைய இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பின்போது இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காகச் சென்ற Dr . ஜேசுதாசன் அவர்களுடன் சேர்ந்து பழகினார் .
இருவரும் லண்டன் மருத்துவ மிஷன் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர் .
Dr . ஜேசுதாசன் தன் நண்பரான Dr . ஏர்னஸ்டை இந்தியாவுக்கு மருத்துவ மிஷனெரியாக அழைத்தார் .
இதனால் 1920 - ம் ஆண்டு United Free Church என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியாவுக்கு வந்தனர் .
Dr . ஏர்னஸ்ட் 50 ஆண்டுகள் தென்னிந்தியாவில் மிஷனெரியாக பணியாற்றினார் .
அந்த காலகட்டத்தில் , இந்திய ஆடைகளை , இந்திய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தார் .
தனது வருமானம் முழுவதையும் மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்கள் கட்டப்பட பங்களித்தார் .
1932 - ம் ஆண்டு திருப்பத்தூரில் ஒரு தேவாலயத்தைக் கட்டினார் .
1930 - ம் ஆண்டு தேசத்தந்தை காந்திஜியுடன் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினார் .
காந்திஜி மற்றும் ராஜாஜி போன்ற முக்கிய இந்திய தலைவர்களின் ஆலோசனையுடன் Dr . ஏர்னஸ்ட் மற்றும் Dr . ஜேசுதாசன் ஆகியோர் 1921 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் கிறிஸ்து குல ஆசிரமத்தை நிறுவினார் .
இதுவே இந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது பிராட்டஸ்டன்ட் ஆசிரமமாகக் கருதப்படுகிறது .
இது ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதும் , கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் வணக்க வழிபாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது .
Dr . ஏர்னஸ்ட் இந்திய வழிபாட்டு முறையிலேயே இயேசுவைப்பற்றி அறிவித்தார் .
இவரது எளிமையான வாழ்வும் , எதார்த்தமான செயலும் , கனிவான பேச்சும் அனேகரை கிறிஸ்துவின் அண்டைக்கு வழிநடத்தியது .
கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்த Dr . ஏர்னஸ்ட் ஃபாரஸ்டர் பேட்டன் அவர்களை மக்கள் செல்லமாக சின்னண்ணன் என்று அழைத்தனர் .
Dr . ஏர்னஸ்ட் 1970 - ம் ஆண்டு மே மாதம் 5 - ம் நாள் திருப்பத்தூரில் கோதுமை மணியானார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory