*மாட்டுவண்டியே தனது வீடு, பிரயாணம்,சமையல், ஊழியம் என்று சத்தியரை பறைசாற்றிய இந்திய மிஷனரி சங்க ஊழியர் அருட்திரு . ஜய்யாதுரை - 1*
*Rev . J , Ayyadurai 1919 - 1921*
திரு . ஐய்யாதுரை தனது வாலிப வயதிலே 1917 ஆம் ஆண்டில் தோர்ணக்கல்லிற்கு ஊழியராக வந்தவர் .
ஆறு மாதங்களிலே , தெலுங்கு வாசிக்கவும் , எழுதவும் , பேசவும் கற்றுக் கொண்டு தோர்ணக்கல் சேகரத்தைக் கவனித்து வந்தார் .
இவர் பிடில் என்ற இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர் .
ஜெபவீரர் , தனது வாலிப வயதிலேயே தாவீது , சாமுவேலைப் போலத் தன்னையே ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணித்து உண்மையுள்ள ஊழியம் செய்தார் .
இவர் திருமணமாகாதவராகையால் , மாதம் : முழுவதும் ஊழியப் பயணத்திலேயே கழித்தார் .
இவரது வீட்டு மாட்டு வண்டிதான் .
சபையில்லாத கிராமங்களுக்குச் சென்று , மாட்டு வண்டியினடியில் சமைத்து , சாப்பிட்டு அதிலே படுத்துக்கொள்வார் .
இவ்வாறு பிரயாணம் செய்து , தனது சரீர சுகத்தை விரும்பாது ஊழியத்திற்குத் தேவையான பலத்திற்காகப் பரிசுத்த ஆவியானவரின் வரத்திற்காக ஜெபிப்பார் .
பிற ஊழியர்களைத் தனது சொந்த சகோதரர்களாகவே கருதுவார் .
அவர்களிடம் ஏதேனும் குறைவு காணப்பட்டால் , அவரைத் தனியாக அழைத்து தவறை உணர்த்தி , மனந்திரும்பும்படி ஜெபித்து வழி நடத்துவார் .
இவர் 1919இல் பெத்த முப்பாரம் என்ற கிராமத்திற்குச் சென்று , அங்குள்ள சபையை முன்னேற்றத்திற்கு நேராய் வழிநடத்தியதால் , அது சேகரத் தலைமையிடமாக மாறியது .
அக்காலத்தில் முப்பாரம் , மாட்டேடு , பொட்லாடா , பொம்மக்கல் முதலிய கிராமங்களில் மட்டுமே கிறிஸ்தவர்கள் வசித்ததால் , இங்கு மட்டுமே சபை ஊழியர்கள் இருந்தனர் .
இவர் முப்பாரம் வந்த சிறிது காலத்திலேயே ' வெள்ளை சோளப் பஞ்சம் ' என்ற பெரிய பஞ்சம் ஏற்பட்டது .
இப்பஞ்சத்தால் கஷ்டப்பட்ட ஏழை கிறிஸ்தவர்களுக்காக , இவர் அரசுசய்தார் . வாலய வேலைகளுக்கு அலுவலர்களிடம் பேசி , பஞ்ச கால உதவி கிடைக்க வழி செ மேலும் , சிலரைத் தோர்ணக்கல் தேவாலய வேலைக அனுப்பினார் .
பேராயர் அருட்பெருந்திரு . அசரியா அவர்கள் - இரங்கூனிலிருந்து வரவழைக்கப்பட்ட அரிசியை , முப்பாரம் கொண்டு வந்து ரூ . 1 - க்கு 6 சேர் வீதம் கொடுத்து அற்புதமாக அவர்களைப் போஷித்தார் .
இப்பஞ்ச காலத்தில் பலர் தங்களது பிள்ளைகளைக் கூட விற்றுவிட்டனர் பலர் மரணமடைந்தனர் .
இப்படிப்பட்ட மோசமான பஞ்ச காலத்தில் , பேராயர் அவர்கள் இரங்கூனிலிருந்து அரிசியை வரவழைத்து , அநேக மக்களைக் காப்பாற்றி போஷித்தார் .
பஞ்ச காலத்தில் இஸ்ரவேல் மக்களை எகிப்திலுள்ள கோசேனில் யோசேப்பு போஷித்த விதமாக , ஆண்டவர் தனது பிள்ளைகளைப் போஷிப்பதற்காகவே , இவர்களை இப்பகுதிக்கு அனுப்பினார் என்று சொன்னால் மிகையாகாது .
இப்பஞ்ச காலத்தில் அநேகர் தங்களது கிராமங்களை விட்டு , பேராயரிடம் அடைக்கலமாகி பின்னர் தங்களது சொந்த கிராமங்களுக்குச் சென்றனர் .
அவர்களுள் சிலர் தற்சமயம் தோர்ணக்கல் கிரீடாபுரத்தில் வசித்து வருகின்றனர் .
இவர் கீர்த்தனைகள் பல இயற்றியுள்ளார் . அவற்றுள் சிலவற்றை ஆந்திரா கிறிஸ்தவகீர்த்தனை புத்தகத்தில் காணலாம் .
இவரது சுவிசேஷ ஊழியத்தின் விளைவாக முப்பாரப் பகுதியில் பல சபைகள் தொடங்கப்பட்டுள்ளன .
இவற்றிற்காக இவர் மிகவும் பாரத்துடன் ஜெபிப்பார் .
இவரது ஜெபத்தின் பயனாக முப்பாரம் சபை மக்கள் விசுவாசத்தில் முன்னேறியுள்ளனர் .
இவர் தனது சொந்த இடத்திற்குச் சென்று , குருவாக அபிஷேகம் பெற்று , திருமணம் செய்து , பிள்ளைகளுடன் தங்கியிருந்து , சேகரத் தலைவராக நெடுங்காலம் ஊழியம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைகிறோம் .
இவர் இப்பகுதிக்காக பிரயாசப்பட்டு ஜெபித்தவர்களுள் மிகவும் முக்கியமானவர் என்று கூறலாம் .

No comments:
Post a Comment