*எளிய வாழ்க்கை வாழ்ந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்த ரிங்கல் தெளபேயின் பிறந்த நாள்* (ஆகஸ்டு 8)
தமிழ்நாட்டில் மயிலாடி என்ற கிராமம் .
அங்கே பத்து அடி நீளமும் , ஆறடி அகலமுமுள்ள ஒரு குடிசை .
மரத்தால் செய்த ஒரு மேஜை , இரண்டு நாற்காலிகள் உள்ள ஒரு கட்டில் , இவைகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் ரிங்கல் தெளபே , இவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார் அவர் .
ரிங் க ல் தெள் பே உயரமானவர் .
ஆனால் ஒல்லியானவர் . உடைகளைக் குறித்து கவலைப்படாதவர் , பழைய சட்டையும் , காற்சட்டையும் கிழிந்துபோன பழையதோர் நார் தொப்பியும் அணிந்திருப்பார் .
யாராவது அவருக்குத் துணிகள் கொடுத்தால் அதை ஏழைகளுக்குக் கொடுத்து விடுவார் .
இவரின் அயராத பணியினால் பல திருச்சபைகள் உருவாயின .
மயிலாடி , பிச்சைக் குடியிருப்பு , தாமரைக் குளம் , புத்தளம் , ஆத்திக்காடு , கோவில் விளை , ஈத்தாமொழி ஆகிய ஏழு இடங்களிலும் திருச்சபைகளைக் கட்டி பள்ளிக்கூடங்களையும் ஏற்படுத்தினார் .
1816ஆம் ஆண்டு . உடல்நிலை பாதிக்கப்பட்டவராக கப்பலில் சென்னைக்குப் புறப்பட்டார் .
கப்பல் மணக்குடி வந்தவுடன் தமது வீட்டுச் சுவரில் எழுதியிருந்த கடன் பாக்கியைப் பற்றிய நினைவு வரவே மாலுமியிடம் மிகவும் மன்றாடிக் கப்பலை நிறுத்திவிட்டு மயிலாடிக்கு விரைந்தார் .
அங்கு வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த தனக்குக் கடன்பட்டவர்களின் பெயர்கள் அனைத்தையும் அழித்தார் .
மயிலாடி மக்கள் அதைக்கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டனர் .
மயிலாடி மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கப்பல் பிரயாணத்தை ஆரம்பித்த இவர் , என்ன ஆனார் என்ற செய்தி இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது .
1 , 100 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்த இத்தொண்டர் அடிமை முறைகளை அகற்றி கிறிஸ்துவின் அருளால் பல அற்புதங்களைச் செய்தவர் .
ஜெபத்திலே தரித்திருந்தவர் .
பிறர் கடன்களை மன்னித்து மறந்து , சிறந்த வழிகாட்டியாய் வாழ்ந்த இவர் , இதே ஆகஸ்ட் 8ம் நாளில் 1770ம் வருடம் பிறந்தார் .

No comments:
Post a Comment