புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

கைவிளக்கேந்திய காரிகை என்று பட்டம் சூட்டப்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தினம் இன்று*

1853ம் வருடம் , ரஷ்யா , துருக்கி நாட்டின் மேல் போர் தொடுத்தது .

ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுக்க எண்ணிய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் துருக்கிக்கு ஆதரவாக போரில் இறங்கின .

இப்போர் கிரிமியன் போர் என்று அழைக்கப்பட்டது .

இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் .

பிரிட்டன் படைவீரர்கள் மிகவும் சோர்வடைந்தனர் .

அதோடு காலரா மற்றும் மலேரியா நோய்கள் அவர்களைத் தாக்கின .

போர்க் காயங்களோடு இரட்டத்தனையான வேதனையை அனுபவித்தனர் .

உடல் வேதனையும் , மனவேதனையும் போர்வீரர்களை உருக்குலைத்தன .

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் .

இளமையிலேயே தொண்டு புரியும் எண்ணம் நிரம்பப் பெற்றவர் , கிறிஸ்துவுக்குள் அனுதினமும் வளர்ந்ததால் கிறிஸ்துவின் சிந்தை நைட்டிங்கேலிடம் நிறைந்திருந்தது .

ஆண்டவருடைய சித்தத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்து செவிலியப் பயிற்சியை மேற்கொண்டார் .

பின்னர் அத்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் எதிர்பாராத அழைப்பு வந்தது .

பிரிட்டிஷ் வீரர்களின் காயங்களை ஆற்றி அவர்களை மீண்டும் சகஜ நிலைக்கு திருப்பச் செய்ய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அழைக்கப்பட்டார் .

சிட்னி ஹெபார்ட் என்ற போர்த்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று 38 செவிலியர்களுடன் துருக்கிக்கு விரைந்தார் .

போர்வீரர்களின் தலைவர்கள் பலர் பெண்களின் சேவையை வெறுத்தனர் .

ஆயினும் , நைட்டிங்கேல் விடா முயற்சியுடனும் , பொறுமையுடனும் பணிவிடைகளை மேற்கொண்டார் .

8 . 000க்கும் மேற்பட்ட வீரர்கள் நோயினின்று காப்பாற்றப்பட்டனர்.

*கைவிளக்கேந்திய காரிகை* என்று பட்டம் சூட்டப்பட்ட இவர் 1856ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய உடன் செவிலியர்களுக்கான பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து அநேக கைவிளக்கேந்திய காரிகைகளைத் தோற்றுவித்தார் .

இதே நாளில் 1910இல் உயிர்துறந்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory