புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அன்பாலானவரை அன்பால் சொன்னவர்

*அன்பாலானவரை அன்பால் சொன்னவர்*


*அம்மை @ ஏமி கார்மைக்கேல் அம்மா*

வட அயர்லாந்தில் மில்லைல் என்னும் சிற்றூரில் பெரும் பணக்கார வீட்டில் பிறந்து வளர்ந்தவர் ஏமி கார்மைக்கேல் .

பின்னர் பணப் பிரச்சனையால் படிப்பைத் தொடர முடியாமல் தன் தாய்க்குத் துணையாக மூத்த மகளாகத் தன் உடன் பிறந்த ஆறு பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பில் இருந்து , முதிர்ச்சியைப் பெற்றவர் .

பள்ளியில் படிக்கும்போது *இயேசு எந்தன் நேசரே* ( Jesus Loves me this I know ) என்ற பாடலைத் தன் வாழ்வில் அப்படியே பொருத்திப் பார்த்து , தன் வாழ்வில் இயேசு ஒருவர்தான் நேசர் என்ற முடிவுக்கு வந்தார் .

வேத புத்தகத்தின்படி நடப்பதே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு வந்த ஏமி , தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை வேத புத்தகத்தின்படி நடப்பதில் கொஞ்சம் கூட தவறவே இல்லை .

எடுக்கவேண்டிய முடிவுகள் சிறிதோ பெரிதோ , தனக்கு வழி காட்ட வேதாகமத்தை மட்டுமே சார்ந்திருந்தார் .

*அம்மை @ ஏமி கார்மைக்கேல் அம்மா*

*Amy Carmichael 1867-2017*150 years*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory