*நெல்லை மாவட்ட வரலாற்று நூல்*
அறிஞர் கால்ட்வெல் எழுதிய அடுத்த நூல் , 1881ல் வெளியிடப்பட்ட *" திருநெல்வேலி மாவட்ட அரசியல் வரலாறு மற்றும் பொதுவாழ்வு வரலாறு தொடக்க காலமுதல் கி . பி . 1801ல் ஆங்கிலேய அரசுக்குக் கையளிக்கப்பட்டது வரை "* என்பதாகும் ( " A Political and General History of the District of Tinnevelly , from the Earliest Pe riod to lis Cession to the English Government in A . D . 1801 ' ) . இந்த நூல் 300 பக்கங்கள் கொண்டது .
சென்னை அரசாங்கத்தின் பராமரிப்பிலும் , லண்டன் அரும் பொருட்கள் காட்சியகத்திலும் ( British Museum ) இருந்த நூற்றுக்கணக்கான பழங்காலத்து ஆவணங்கள் , பதிவேடுகள் , கடிதங்கள் முதலிய பல்வேறு சான்றுகளைக் கால்ட்வெல் தேடிக் கண்டுபிடித்து , துருவி ஆராய்ந்தார் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வெட்டுக்களையும் செதுக்கப்பட்ட சாசனங்களையும் அவர் தோண்டியெடுத்தார் .
அவைகளிலுள்ள பழங்கால எழுத்துக்களை வாசித்தறிந்தார் .
மேலும் கொற்கையிலும் காயலிலும் புதைபொருள் ஆராய்ச்சி செய்தார் .
இந்த அரும்பெரும் முயற்சியே இந்நூல் தோன்றுவதற்கு வழிவகுத்தது .
இந்த நூலின் நீண்ட தலைப்பு இதிலுள்ள முக்கிய செய்திகளை மிகவும் சுருக்கிக் கூறுகிறது .
ஆயினும் இந்த நூல் நெல்லையின் வரலாற்றை மட்டுமல்ல , தமிழகத்தை முற்காலத்தில் ஆண்டுவந்த பாண்டியர்கள் நாயக்கர்கள் நவாப்கள் பாளையக்காரர்கள் உட்பட பல அரச பரம்பரையினரைக் குறித்த விவரங்களையும் தருகின்றது .
இந்த நூலின் வழியாய் நெல்லை மற்றும் தமிழக வரலாற்றுக்குக் கால்ட்வெல் செய்த சேவைக்காக சென்னை அரசாங்கம் அவருக்கு ரூ1000 பரிசளித்தது .
20 ஆம் நூற்றாண்டில் அரசு வெளியிட்ட வரலாற்றுப் பெட்டகமான " திருநெல்வேலி கெ . ஜற்றியர் ' ( Tinnevelly Gazetteer ) அறிஞர் கால்ட்வெலின் புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும் .

No comments:
Post a Comment