புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

*அக்கினியிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு கொள்ளி*

*அக்கினியிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு கொள்ளி*

நெல்லையில் நிலவிய சமயப் பின்னணி
( ஆமோஸ் 4 : 11 )

இந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவிக்குக் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுகிறது .

கலப்படம் செய்யப்பட்ட சாராயத்தைக் குடித்ததின் விளைவாகவே கணவன் இறந்தாலும் அவனது மனைவிக்கு அரசாங்கம் பெரிய உதவித்தொகையை அளிக்கும் நிலை இந்தியாவில் இன்று உண்டு .

ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு , முதிர்வயதில் மரித்துப்போன கணனோடு இளவயது மனைவியையும் சேர்த்து வைத்து எரிப்பது நம் நாட்டு வழக்கம் .

மதுரையில் திருமலை நாயக்க மன்னன் 75வது வயதில் மரணம் அடைந்தபோது அவனது உடலோடு சேர்த்து எரிக்கப்படுவதற்காக அவனுடைய மனைவியர் சுமார் 200பேர் நகரின் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தமிழக வரலாறு இத்தகைய பின்னணியத்தில் , தஞ்சாவூரில் இறந்த கணவனின் எரியும் சிதையிலிருந்து அந்தணப் பெண்மணி கோகிலா , கர்னல்லிற்றில்ற்றன் ( ColonelLitleton ) என்ற ஆங்கிலப் போர் வீரனால் காப்பாற்றப்பட்டாள் , அவள் , சில ஆண்டுகளுக்குப் பின்பு 1778ல் பாளையங்கோட்டையில் ஷ்வார்ற்ஸ் ( F . C . Schwartz ) ஐயரிடம் க்ளாரிந்தா ( Clarinda ) என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்று , திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவராக மாறினாள் .

க்ளாரிந்தா உட்பட அந்த நாளில் கிறிஸ்தவர்களாக மாறியது மொத்தம் 40 பேர் .

அன்று முதல் நெல்லையில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்தது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory