புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜான் போஸ்கோ

*இளைஞர்களுக்கென சலேசிய சபையை தோற்றுவித்த ஜான் போஸ்கோ பிறந்ததினம் இன்று*

இளைஞர்களின் நண்பன் ' என்று அழைக்கப்படும் ஜான்போஸ்கோ இத்தாலியில் 1815ம் ஆண்டு பிறந்தவர் .

தாயின் அன்பான அரவணைப்பும் , ஆலோசனைகளும் இவரை இறைவனுக்குள் வளரச் செய்தன .

சிறு பருவத்திலேயே தான் ஒரு குருவாக மாற வேண்டும் என்று ஆவல் கொண்டார் .

எனினும் பலமுறை கிடைத்த வெளிப்பாடுகளுக்குப் பின்னரே தன்னை குருத்துவப் பணிக்கு ஆயத்தம் செய்தார் .

நீ ஒரு கவன மற்ற குருவாயிருப்பதை விட விவசாயியாக இருப்பதே மேல் என்ற தாயின் வார்த்தைகள் அடிக்கடி இவரை எச்சரித்தன .

எனவே தன் பணிகளை மிகுந்த கவனத்துடனும் , நேர்மையுடனும் செய்து வந்தார் .

நகைச்சுவை உணர்வோடும் , கலகலப்பாகவும் பேசும் தன்மை உடையவர் . இளைஞர்களையும் , சிறுவர்களையும் அதிகமாக நேசித்தார் .

ஆக்க சக்தி நிறைந்த இளைஞர்களைக் கொண்டு ஆரட்டரி அமைப்புகளை ஏற்படுத்தினார் .

வாலிபர்களுக்காக ' மனமகிழ் நண்பர் ' குழுவை ஆரம்பித்தார் . சாலையில் ஆதரவற்று , கைவிடப்பட்ட வாலிபர்களையும் அரவணைத்து அவர்கள் வாழ்வு நலம்பெற கைவேலைகளைக் கற்றுத் தந்தார் .

ஆசாரி வேலை , தோல் தொழில் , செருப்பு தைத்தல் , அச்சடித்தல் இவைகள் மூலம் இளைஞர்கள் மறுவாழ்வு பெற்றனர் .

இளைஞர்களுக்கென சலேசிய சபை ' ஒன்றை ஏற்படுத்தினார் .

ஏறக்குறைய 70 புத்தகங்கள் எழுதி அவைகளை மக்கள் நலம்பெறவிட்டுச்சென்றுள்ளார் .

விக்டர் ஹியூகோ போன்ற இறை மறுப்பு மனிதர்களை மனந்திரும்பச் செய்தார் .

இவரின் செயல்பாடுகளால் எண்ணற்ற இளைஞர்கள் தீய வழிகளை விட்டு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர் .

இன்றும் இவரின் பணி இன்பமுடன் தொடர்கின்றது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory