புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் - 3 திரு . மனோன்மணியம்

*தோர்ணக்கல் திருநெல்வேலிக்கு* *திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் - 3*

திரு . மனோன்மணியம்

இவர் 1912 - 1913 இல் திருநெல்வேலியிலிருந்து தோர்ணக்கல் வந்து பேராயர் அலுவலகப் பணியாளராகப் பணியில் சேர்ந்தார் .

இங்கு தான் இவருக்குத் திருமணம் நடைபெற்றது .

சென்னை பேராயருடன் கலந்து பேசி , நமது பேராயர் இவரை , ஏழை மக்களுக்காக நிலம் வாங்கும் பணியில் நியமித்தனர் .

அப்பொழுது இரண்டு மைல் தூரத்திலுள்ள 130 ஏக்கர் நிலம் ஏழைகளாயிருந்த அஹமத்நகர் பஞ்சரைச் சேர்ந்த கிறிஸ்தவமக்களுக்கு விவசாயம் செய்வதற்காக வாங்கப்பட்டது .

இம்மக்கள் இங்கு வீடுகள் கட்டி , நிலத்தில் பயிரிட்டனர் .

இக்கிராமம் வேதநாயகபுரம் என்றழைக்கப்பட்டது .

நமது பேராயர் ஆண்டவருக்கென்று செய்த ஊழியத்தின் பலன் இது என்று சொல்லக்கூடிய அளவில் இக்கிராமம் இன்று வரையில் இப்பெயராலே வழங்கிவருகிறது .

நேத்தக்கானி ஜான் கோட்டய்யா , ரொய்யா யோசேப்பு , முத்தம் ஆபிரகாம் , சல்வாதி யோவான் , குடித்தொட்டி கனகரத்தினம் , சிலுக்க பத்தினி பவுல் முதலிய குடும்பத்தினர் இக்கிராமத்தில் குடியேறியவர்கள் .

அதன் பின்னர் திரு . கும்மரி பர்னபா ஊதிய மையத்தின் அனுமதியுடன் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்தார் .

நிலம் முழுவதிலும் பயிரிடுவதற்கு அவர்களிடம் கொஞ்சம் பணம் வசூல் செய்யப்பட்டது .

இதற்காகத் திரு . மனோன்மணியம் நியமனம் செய்யப்பட்டார் .

இந்நேரத்தில் 1944 ஆம் ஆண்டில் இவர் இவ்வேலையை விட்டு விட்டு , வேதநாயகபுரத்தில் நிலம் வாங்கி அங்கேயே ஒரு வீடு கட்டி , அதில் வசித்து வந்தார் .

தற்சமயம் இக்கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர் .

இக்கிராமத்திலே இவர்களுக்கு ஏற்பட்ட பல விதமான கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு , கிறிஸ்துவில் திடமாக வாழ்ந்து சுற்றிலுமுள்ள பிற மதத்தினருக்குச் சாட்சியாக வாழ்ந்து வருகின்றனர் .

அவர்களுள் சிலர் உயிருடன் இல்லையெனினும் அவர்களது பிள்ளைகள் நன்கு கல்வி கற்று , ஊழியம் செய்கின்றனர் .

தங்கள் மத்தியில் இருக்கிற குடிசை தேவாலயத்தை ஓடு போட்டதாக மாற்ற விரும்புகின்றனர் .

திரு . கும்மரி பர்னபா வேதாகமக் கல்வி கற்று , சில காலம் அங்கேயே ஊழியம் செய்து , சொந்த வீட்டைக் கட்டி , அதில் 1932 ஆம் ஆண்டு காத்தருக்குள் நித்திரை அடைந்தார் .

இவரது மூன்று மகன்கள் தேவனுடைய ஊழியத்தைச் செய்து வருகின்றனர் .

ஒரு மகன் விவசாயம் செய்து வருகிறார் . இங்கே இரண்டு வருடங்கள் குருவானவர் தங்கியிருந்து ஊழியம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அநேகர் கல்வி கற்றுள்ளனர் . வேதாகமம் , கீர்த்தனை புத்தகங்களைப் பலர் சொந்தமாக வைத்துள்ளனர் .

இம்மக்கள் சபை குருவுக்கு ஊழியத்தில் மிகவும் உறுதுணையாக உள்ளனர் .

அரசாங்க ஆணையின்படி பயிரிட்டவரின் நிலம் பயிரிட்டவருக்கே சொந்தமாகக் கொடுக்கப்பட்டது . இச்சபைகள் விரிவடைந்து , தேவாலயம் கட்டப்பட்டு , கிறிஸ்தவர்கள் அனைவரும் முன்னேறிச் செல்வதற்கு ஜெபிக்குமாறு உங்கள் அனைவரையும் வைண்டுகிறேன் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory