புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஏமி அம்மையின் நீல நிறக் கண்கள்

*ஏமி அம்மையின் நீல நிறக் கண்கள்*

வாழ்வின் பிரகாசமான பகுதிகள் மட்டுமல்லாமல் இருளான பகுதிகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும் , அவற்றை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் ஏமி சிறுவயதிலிருந்தே சுற்றுக் கொண்ட மிக முக்கிய பாடம் .

தன் தாயைப் போன்ற நீல நிறக் கண்கள் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்ட ஏமி , மூன்று வயதாக இருக்கும்போது , இயேசு உன் ஜெபத்தைக் கேட்பார் என்று சொல்லிக்கொடுத்திருந்த தாயின் வார்த்தைகளை அப்படியே நம்பி , தினமும் இரவு ஜெபத்தில் நீல நிறக் கண்கள் வேண்டும் என்ற உறுதியாக ஜெபிப்பதும் , காலை எழுந்ததும் விசுவாசத்துடன் கண்ணாடியில் சென்று பார்ப்பதுமாக இருந்தார் .

ஆனால் அவர் கண்கள் இருக்கிறபடியேதான் இருந்தது .

சோர்ந்து போனார் . விரைவில் , இல்லை என்பதும் ஒரு பதில்தான் என்பதை ஏற்றுக் கொண்டார் .

ஆனால் , அந்தப் பழுப்பு நிறக் கண்கள்தான் முப்பது வருடங்களுக்கும் மேலான இந்திய ஊழியத்தில் தன்னை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள ஒரு காரணமாக இருந்தது என்பதைப் புரிந்து கொண்டார் .

சேலையும் , காப்பித் தூளும் , பழுப்பு நிறக் கண்களும்தான் பல சிறுமிகளை மீட்ட சாகசம் நிறைந்த அனுபவங்களில் அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன .

ஏமியின் தாயார் சிறிது காலம் டோனாவூருக்கு வந்து , தன் மகளின் ஊழியங்களில் பங்குபெற்றார் .

நாடு திரும்பியதும் தன் மகளின் ஊழியத்துக்கான ஜெப உதவிகளையும் , பண உதவிகளையும் ஒருங்கிணைப்பதற்காகத் தன் மரணம்வரை உழைத்தார் .

பலர் ஊழியர்களாக போனாவூருக்கு வந்தனர் .

பலர் தங்கள் பொருளாலும் ஜெபத்தாலும் அங்கிருந்தே தாங்கிவந்தனர் .

ஊழியம் விரிவடைந்ததுபோலவே அதற்கான உதவிகளும் பெருகின.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory