புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நேட் செயின்

அவுக்கா இந்தியர் இன மக்களுக்கு நற்செய்தியை சுமந்து வந்த நேட் செயின் பிறந்த தினம் இன்று ஆகஸ்ட் 30

#TINNEVELLY #HISTORICAL

தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற பிரதேசம் , அடர்ந்த காடுகள் . இருள் நிறைந்த பகுதிகள் . அவுக்கா இந்தியர் என்ற நாகரிகமற்ற முரட்டாட்டமுள்ள மக்கள் வசித்து வந்த பகுதி,

அங்கு ஆண்டவரின் பணியைச் செய்து , அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக , பலர் பிரயாசப்பட்டனர் .

ஆயினும் , அது மிகுந்த கடினமான முயற்சியாகக் காணப்பட்டது .

இந்நிலையில் அமெரிக்க மிஷனெரி ஏவியேசன் ஐக்கியத்தை சேர்ந்த நேட் செயின்ட் என்ற மிஷனெரி இம்மக்களைக் கண்டுபிடித்து , அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் வாஞ்சை கொண்டார் .

இவர் ஒரு சிறந்த விமான ஓட்டி . எனவே ஆகாய் விமானத்தில் சென்று , அந்த அடர்ந்த காடுகளில் வசித்து வந்த அம்மக்களைக் கண்டுபிடித்தார் .

இப்பொழுது அவர்களை எப்படி சந்திப்பது என்ற கேள்வி எழுந்தது .

இவர் எட்வர்ட் மெக்னல்லி , ஜிம் எலியட் , பீட்டர் பிலமின் மற்றும் ரோஜர் யுடரேன் போன்ற மிஷனெரிகளுடன் கலந்து ஆலோசித்து ஜெபித்தார் . ' ஆண்டவர் இவர்களின் செயல்பாடுகளுக்குப் புது வேகத்தைக் கொடுத்தார் .

ஆகாய விமானம் மூலம் சென்று பல வெகுமதிகளை அவர்களுக்கு அள்ளி வீசினர் . தங்களை சிநேகிதர்களாக காட்டினர் .

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது . விமானத்திலிருந்து இறங்கி அம்மக்களை நோக்கி மிகுந்த வாஞ்சையுடன் சென்றனர் .

அன்று ஜனவரி 8 . அவுக்கர்களை கண்டுபிடித்த மகிழ்ச்சியால் தங்கள் துணைவியாருக்கு கம்பியில்லா தந்தியின் மூலம் செய்திகளை தெரிவித்தனர் .

அந்தோ ! இதுதான் அவர்களின் கடைசி பேச்சாக அமைந்தது . கிறிஸ்துவை அம்மக்களுக்கு கொடுக்கச் சென்ற இவர்களின் உயிரை அவர்கள் பறித்தார்கள் . உடலை ஆற்றில் வீசினார்கள் . 5 பேர் உடல்களும் அலங்கோலமாகக் கிடந்தன .

5மிஷனெரிகளும் இரத்த சாட்சியாயினர் .

நாட்கள் நகர்ந்தன . அவர்களின் முயற்சி வீணாகவில்லை . அவுக்கர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியால் பிடிக்கப்பட்டனர் .

அவுக்கர் இனம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory