புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

டி சாங்கி

பாடல்களால் அநேக மக்கள் உள்ளத்தை உடைத்த டி சாங்கி பிறந்ததினம் இன்று ஆகஸ்ட் 28

டி . எல் . மூடி என்ற உலக பிரசித்தி பெற்ற ஊழியருடன் இணைத்துப் பேசப்படும் இன்னொரு மாபெரும் சிறந்த ஊழியர் டி . சாங்கி என்பவர் ஆவார் .

1870ஆம் ஆண்டு , அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் நடைபெற்ற YMCA சர்வதேச மாநாட்டில் , பங்கு பெற்றபோது ஏற்பட்ட சந்திப்பினால் , இருவரும் இணைந்து ஊழியத்தை மேற்கொண்டனர் .

டி . சாங்கி ஒரு போர்வீரர் . இவர் போர்வீரர்களின் ஆவிக்குரிய தலைவராகவும் காணப்பட்டார் .

எனவே அப்போர் வீரர்களுக்கு அநேக கிறிஸ்தவ உயிர்மீட்சிப் பாடல்களைக் கற்றுக்கொடுத்து , அவர்களை சிறந்த கிறிஸ்தவர்களாக உருவாக்கினார் .

டி . எல் . மூடியின் அழைப்பை ஏற்ற சாங்கி , அவருடன் இணைந்து அநேக ஆவிக்குரிய கூட்டங்களில் கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடல்களைப் பாடினார்.

1875ஆம் ஆண்டு , இவர்கள் இங்கிலாந்தில் தங்களுடைய கூட்டங்களை முடித்துவிட்டு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தனர் .

அது கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம் . அப்பயணத்தில் சாங்கி சில பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு பாடலைப் பாடி முடித்த வேளையில் , எதிரே ஒரு பயங்கர முரட்டு மனிதன் வந்து நின்றான் .

*" நீ எப்பொழுதாவது யூனியன் படையில் சேவை புரிந்தாயா ? "* என்று கேட்டான் .

அதற்கு சாங்கி " ஆம் " என்று பதிலளித்தார் .

உடனே அவன் , " நானும் உன் பக்கத்தில் தான் இருந்தேன் . ஆனால் நான் எதிரி படையில் பணிபுரிந்தேன் .

அன்று உனக்கு எதிராக துப்பாக்கியை குறிவைத்து நீட்டிக் கொண்டிருக்கும்போது , நீ இப்பொழுது பாடிய பாடலைப் பாடினாய் . அதனால் , என் மனம் உன்னை சுட்டுக் கொல்ல இடம் கொடுக்கவில்லை , " என்று கூறினான் .

இதைக் கேட்டவுடன் சாங்கி அவனை கட்டித் தழுவினார் .

இருவரும் தனியேப் போய் பேசினர் . அம்முரட்டு மனிதன் கிறிஸ்துவுக்குள் நடத்தப்பட்டான் .

சாங்கியின் பாடல்களால் அநேக மக்கள் உள்ளத்தில் குத்துண்டவர்களாக , தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு , கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்துப் புதுவாழ்வை துவங்கினர்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory