புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

J M ஸ்ட்ரான் ஐயர் ( Rev . J . M . Strachan )

இந்தப் பெரிய குருவோத்தமர் கூறுவது மெய்தான் என்ற பூசாரி

பாம்பனிலும் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் காலரா அந்த வருஷம் ( 1864 - 65 ) அது மற்ற ஆண்டுகளை விடக் கொடியதாக விருந்தது.

ஏராளமான மக்கள் தாக்கப் பட்டனர்.

தாக்கப்பட்டவர்களில் அநேகர் மரித்தார்கள்.

எங்கும் பேதி , மக்களுள்ளத்தில் பீதி ! டிசம்பர் , ஜனுவரி மாதங்களில் கொஞ்சம் மழையும் அதிகம் பனியும் பெய்ததால் , *காலராவுக்குக் கொண்டாட்டம் ; ஜனங்களுக்குத் திண்டாட்டம் !* இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிறிஸ்தவர்கள் என்று பாகுபாடின்றி , அது மக்களைக் கொன்றது .

அக்காலங்களில் ராமநாதபுரம் மிஷனெரிகள் பாம்பனில்தான் வசித்துவந்தார்கள்.

அந்நாளில் மிஷனெரியாயிருந்தவர் J M ஸ்ட்ரான் ஐயர் ( Rev . J . M . Strachan ) . மருத்துவ அறிவு பெற்றிருந்த அவர் , காலராவால் தாக்குண்டவர்களைச் சந்தித்து , மருந்து கொடுக்கவாரம்பித்தார்.

உபதேசிமார் , பிரசங்கிமார் ஆகிய ஊழியர் அவருடன் ஒத்துழைத்து , ஓய்வை நாடாமல் , ஓடியாடி மருந்துகளை வினியோகித்து , ஐயர் கற்பித்திருந்த ஆலோசனைகளைச் சொல்லி வந்தனர்.

மருந்துகளைப் பெற்று உட்கொண்டு , கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை ஏற்று , அவற்றின்படி நடந்து கொண்டவர்களில் அநேகர் பிழைத்தார்கள் .

இந்தத் தளம் கிறிஸ்தவர்களுமே அம்மருந்துகளினாலும் ஆலோசனைகளினாலும் பயனடைந்தவர்கள்.

முஸ்லிம்களோ , கிறிஸ்து மார்க்கத்தார் மீதுள்ள வெறுப்பினால் , மருந்துகாயம் வேண்டாமென்றனர் ஆலோசனைகளையும் புறக்கணித்தனர் .

ஸ்ட்ரான் ஐயர் , ' ஏன் வெறுக்கிறீர்கள் ? - - - கேட்டால் , அவர்கள் ' ' சாவது எங்கள் விதி யார் என்ன செய்துவிட முடியும் ? ' ' என்பர் .

காலராக் காலத்தில் மிஷனெரியும் . ஊழியரும் செய்த உதவியை இந்துக்கள் வெகுவாய்ப் பாராட்டினர் .

அவர்கள் சமுதாயத்தில் ஐயரின் செல்வாக்கு மிகுந்தது .

அவர் என்ன சொன்னாலும் அவர்கள் உவப்புடன் கேட்டு நடந்து வரலாயினர்.

ஐயருக்கே அது வியப்பாயிருந்தது .

ஒரு நாள் மாலைப்பொழுது பாம்பன் நகரின் தெருக்களி லொன்றில் ஒரு கோயில் அதில் கருங்கல் விக்கிரக மொன்று நெய்யாலும் எண்ணெயாலும் அது பிசுக்கேறிக் கறுப்பாயிருந்தது .

அதின் மேல் சிவப்பாய் குங்குமம் , செந்துரம் முதலியன பூசப்பட்டிருந்தன.

கோயிலுக்கு முன் ஒரு சிறு பந்தல் ; தோரணங்கள் ; கொட்டுமேளம் , வாத்தியங்கள் ; ஜனத்திரள் ; மிகுதியானவர்கள் கிராமவாசிகள் .

ஒருவன் ஒரு பலிக்கிடாயைப் பிடித்திருந்தான் ; ஒருவன் கையில் ஒரு சேவல் ; பெண்கள் ஓலமிடும் சத்தம் .

குழப்பம் மிகுந்த பேச்சுக் குரல்கள் . பூசாரியின் கையில் அரிவாள் . கிடாயை வெட்டத்தயாராயிருந்த பூசாரி ஆயத்தமானான்.

அச்சமயத்தில் திடீரென்று கொட்டுமேளமும் வாத்தியங்களின் இசைச் சத்தமும் , பெண்களின் ஓலமும் , பேச்சுக் குரல்களும் நின்றுவிட்டன ! அமைதி ! ! நிசப்தம் ; ஏன் ? என்ன நேரிட்டது ? வேறொன்றுமில்லை . ஸ்ட்ரான்ஐயர் அங்கு பிரசன்னமாகிவிட்டார் !

ஜனங்களுக்கு அவர் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் அவர்களை அவர் முன் அமைதியாயிருக்கச் செய்துவிட்டன !

ஐயர் பூசாரியிடம் சென்று , தான் சில வார்த்தைகள் . பேச விரும்புவதாகச் சொன்னார் .

பூசாரி ஜனங்களை உட்காரக் கட்டளையிட்டான் .

சிலர் தரையில் உட்கார்ந்தனர் , பலர் நின்றார்கள் . ஐயர் தாழ்ந்த குரலில் அன்பு ததும்ப அம்மக்களை விளித்துப் பேசலானார் .

ஜனங்கள் அமைதியாகக் கேட்கலாயினர் . ' விக்கிரக வணக்கம் வீண் என்றும் , தெய்வத்திற்கு ஏற்காததென்றும் பலிகளை அவர் விரும்புவ தில்லையென்றும் போதிக்க ஆரம்பித்த அவர் , கடவுளின் கருணை , கிருபை , கடாட்சம் முதலிய தன்மைகளையும் , கிறிஸ்து இயேசுவில் காணப்பட்ட அவரின் தெய்வத்துவத்தையும் , அவர் மூலமாய் நமக்கு அருளப்பட்டு - இலவச இரட்சிப்பையும் பற்றி விவரமாய்ப் பேசினார்.

முடிவில் , " இதெல்லாம் வேண்டாம் , இவற்றை நிறுத்தி விடுங்கள் ; வீட்டுக்குப் போங்கள் , கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் , ' ' என்று கூறி நிறுத்தினார்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பூசாரி எழுந்து , ' இந்தப் பெரிய குருவோத்தமர் கூறுவது மெய்தான் .

அவர் தன்னுடைய தெய்வத்திடம் நமக்காக வேண்டிக்கொள்வாரானால் நாமெல்லாரும் பத்திரமாயிருப்போம்.

அவர் நமக்காக ஜெபம் பண்ணுவார் . வாருங்கள் , நாம் நமது வீடுகளுக்குப் போவோம் என்று அழைத்து , ஐயருக்கு நன்றி சொல்லி , கடவுளிடம் தங்களுக்காக வேண்டிக் கொள்ளக் கேட்டு , வணக்கம் கூறிப் புறப்பட்டுவிட்டான்.

கூட்டமும் அமைதியாகக் கலைந்தது . அன்று அந்தக் கிடாயும் பிழைத்தது , அந்த சேவலும் மீண்டது ! அடுத்த நாட்காலையில் செட்டைகளை அடித்துக் " கொக்கரக் கோ கோ ' என்று அது எவ்வளவு உற்சாகத்துடன் கூவினது ! அன்று கொடை கொடுக்கப்படவில்லை ; என்றுமே இல்லை ! ஸ்ட்ரான் வேண்டிக் கொண்டார் :

காலரா போன இடந்தெரியவில்லை !

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory