*தோர்ணக்கல் இந்திய மிஷனெரி சங்க ஊழியர்கள் வருகை - 4*
ஊழியர்கள் பலரின் வருகை திரு . ஜாண் சீனிவாசகம் , திரு . தேவதஞ்சம் என்ற இரு வாலிபர் தங்களை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்து இப்பகுதிக்கு 1907 ஆம் ஆண்டு ஜீலை 26 ஆம் நாள் வந்தனர் .
திரு . ஜாண் சீனிவாசன் தீவிரமான இந்து , பிராமண குலத்தைச் சேர்ந்தவர் கர்த்தரின் மூலம் தொடப்பட்டு , தனது வேதங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு கர்த்தரின் ஊழியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் .
தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த திரு . தேவதஞ்சம் என்பவரும் இதே போல் ஆண்டவரால் ஏவப்பட்டு இவ்வூழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார் .
இவர்களிருவரும் குறுகிய காலத்திலேயே தெலுங்கு மொழியைக் கற்று சில்வேறு என்ற கிராமத்தில் தங்கியிருந்து , அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்குக் காலையிலும் , மாலையிலும் சுவிசேஷத்தை அறிவித்தனர் .
இதன் மூலம் சில்வேறுவின் அருகிலுள்ள தர்மாவரம் என்ற கிராமத்தில் சிலர் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர் .
இவ்வாறாக நமது ஊழியர்களின் ஊழியத்தின் மூலம் மோதுகுலகூடம் , உல்லப்பல்லி , அப்பாய்பாளம் முதலிய கிராம மக்கள் நமது சபையில் அங்கத்தினராவதற்கு முன் வந்தனர் .
1908 ஆம் ஆண்டு முதல் திரு . சாமுவேல் பாக்கியநாதன் , திரு . சாலொமோன் பாக்கிய நாதன் ஆகிய இருவரும் தோர்ணக்கல்லிலும் , திரு . தேவசகாயம் மானுக்கோட்டையிலும் , திரு . சீனிவாசன் , திரு . தேவதஞ்சம் ஆகிய இருவரும் மேடுதப்பல்லி , சில்வேரு முதலிய கிராமங்களிலும் ஊழியம் செய்தனர் .
இவர்களின் ஊழியத்தின் பயனாக , ஆச்சரிய விதமாக பன்னிரெண்டு கிராமங்களில் வசிக்கும் மாலா , மாதிகா , எருக்கலா , வட்டரா முதலிய குலங்களைச் சேர்ந்த மக்களின் உள்ளத்தை ஆண்டவர் தூண்டியதில் , நான்கு வருடங்களில் அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்வந்தனர் .
இதைக் கண்ட ஊழியர்கள் மேலும் உற்சாகத்துடன் ஊழியத்தை நிறைவேற்றியதற்கு ஆண்டவருக்குத் தோத்திரமுண்டாவதாக .
இக்கிராமங்களில் வசிக்கும் அநேகர் கல்வி கற்று தேவதயவிலும் , மனுஷர் தயவிலும் வளர்ந்து குருக்களாகவும் , ஊழியர்களாகவும் இன்று வரையிலும் பணி செய்து வருகின்றனர் .
கடவுள் தமது சபைகளை ஆசீர்வதித்து , விருத்தி அடையச் செய்ததால் நாம் ஆண்டவருக்கு அதிகமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் .

No comments:
Post a Comment