*செம்புலிங்கமும் ஏமி அம்மையும்*
பணக்காரர்களின் கொடுமை , காவலர்களின் பொய்க் குற்றச்சாட்டு போன்றவற்றால் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு , அங்கு நடந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தப்பி வெளியே வந்த செம்புலிங்கம் என்ற ஒரு நபர் மீது அம்மாவுக்கு பெரும் பாரம் ஏற்பட்டது .
அந்த நபரைச் சந்திக்க வேண்டும் , அவருக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்ல வேண்டும் , அவரை மனம் திரும்பி சரணடையச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது .
தமிழகத்தின் ராபின்ஹூட் என்று இந்திய , இங்கிலாந்து பத்திரிக்கைகளில் பெயர்பெற்ற செம்புலிங்கத்தின் மனைவி இறந்துபோகவே தனது பிள்ளைகளை அம்மாவின் ஐக்கியத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை செம்புலிங்கம் வைத்து , இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அம்மா சொல்ல , இருவரும் ஆன்மீகத் தாயும் பிள்ளையும்போல் ஆகிவிட்டனர் .
பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் தன்னிடம் வந்து தான் ஞானஸ்நானம் வாங்க வேண்டும் என்று கேட்டதாகவும் , கல்கத்தாவிலுள்ள போதகர் ஒருவர் செம்புலிங்கத்துக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் ஒரு கனவு கண்டார் அம்மா ஏமி , : அதே கனவு அப்படியே நிறைவேறியது , கல்கத்தாவிலிருந்து திருவாங்கூர் செல்லும் வழியில் திருநெல்வேலியில் ஒரு நாள் இருந்த அந்தப் போதகர் . செம்புலிங்கத்துக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் .
செம்புலிங்கம் வேதாகமத்தை ஒழுங்காக வாசித்ததுடன் அதன்படி நடக்க அதிகம் பிரயாசப்பட்டார் . அதில் வெற்றியும் பெற்றார் .
காவலர்களின் கொடுமை தாங்க இயலாமல் மீண்டும் சிறையிலிருந்து தப்பினாலும் இனி துப்பாக்கியால் யாரையும் சுட மாட்டேன் என்றும் அம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருந்தார் செம்புலிங்கம் , அதை தன் மரணத்தின்போது கூட காப்பாற்றினார் .
செம்புலிங்கத்தை அரசாங்கத்திடம் சரணடையும்படியும் , தான் நீதிபதிகளிடம் அனுமதி பெற்று பெரும் கொடுமைகள் இல்லாத சிறைத் தண்டனையை செம்புலிங்கம் அனுபவிக்க வழி செய்வதாகவும் அம்மா சொன்னாலும் , இனி தன்னால் சரணடைவது இயலாது என்று நினைத்தார் செம்புலிங்கம் , செம்புலிங்கத்தின் பெயரால் பலர் திருட்டுகள் செய்து அவரது பெயரை இன்னும் மோசமாக்கினார்கள்
அரசாங்கத்தின் கோபமும் செம்புலிங்கத்தின் மீது அதிகரித்துக் கொண்டே இருந்தது .
இறுதியில் செம்புலிங்கத்தைத் தந்திரமாகப் பிடிக்கத் திட்டமிட்ட காவலர்கள் தோற்றாலும் , செம்புலிங்கம் அவர்களைத் துப்பாக்கியால் சுடாமல் , முடிந்தவரை தப்பிக்க முயற்சித்தார் .
அவரது தோழன் காசி காவலரால் சுடப்பட்டவே , அவர்களிடம் சரணடைந்தார் செம்புலிங்கம் , காவலர்கள் செம்புலிங்கத்தை ஆசை தீர சித்திரவதை செய்து கொன்றனர் .
செம்புலிங்கம் , சரணடையாமல் போனதும் , அவரது மரனமும் அம்மாவுக்கு அதிக துக்கத்தைக் கொடுத்தது .
அவரைப் பலர் ஏளனம் செய்யவும் காரணமாக இருந்தது .

No comments:
Post a Comment