புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஏமி கார்மைகேல் அம்மையின் எளிமையும் , அடக்கமும்

*ஏமி கார்மைகேல் அம்மையின் எளிமையும் , அடக்கமும்*

அக்குளிர்நாட்டில் தலையில் தொப்பிகூட போட முடியாத அளவுக்கு வசதியும் அந்தஸ்தும் இல்லாத ஷாலிஸ் , அதாவது ' துண்டுக்காரிகள் என்று அழைக்கப்பட்ட தலையில் ஷால் எனப்படும் துண்டு கட்டிக் கொண்டு வேலைக்குச் சென்று வரும் சிறுமிகளுக்காகத் தன் இளம் வயதில் பெரும் சமூகப் பணியுடன் ஆன்மீகப் பணியையும் செய்தவர் ஏமி .

அந்தச் சிறுமிகளை ஒரு ஐக்கியமாகக் கூட்டுவதற்கு ஒரு இடம் தேடியபோது , இடத்துடன் அதில் கட்டிடம் கட்டவும் பண உதவி அற்புதமாகக் கிடைத்தது .

ஆலயத்தின் அறை ஒன்றில் நடந்த அந்த வகுப்புகள் , இடம் போதாமல் 500 பேர் அமரக்கூடியவரவேற்பு அரங்கம் என்ற பெயரில் கட்டப்பட்டது .

அதற்கான இடம் , கட்டுமானப்பொருட்கள் யாவும் இரண்டே பேரின் நன்கொடைகளில் கிடைத்தன .

அந்தப் பணியின் துவக்க விழாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு , கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த அந்த எளிமையும் , அடக்கமும்தான் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் கூட தெரிகின்றது .

ஆம் , கட்டிடம் வேண்டாம் , வெறும் மண் குவியலுக்கு மேல் ஒன்றும் தேவையில்லை என்று சொன்னவருக்கு , பறவைகள் நீர் அருந்தி , குளித்துச் செல்ல ஒரு சிறு தொட்டி மட்டுமே , அம்மை என்ற பெயர் பொறிக்கப்பட்டு அவர் விதைக்கப்பட்ட இடத்தின் மீது இருக்கின்றது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory