புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வேதநாயகர்

வேதநாயகர் டாக்டர் ஜான் என்பாரிடம் தரங்கம்பாடியில் 1780 முதல் இரண்டாண்டுகள் இறையியல் கல்வி பயின்றார் .

லுத்தரன் ( Lutheran ) பள்ளியில் படித்ததால் அவருடைய எழுத்துக்களில் அவ்வுட்சமயக் கருத்துக்கள் பலவற்றைக் காணமுடி கின்றது .

அக்காலத்தில் வழக்கிலிருந்த பெப்ரீசியஸ் ஐயரின் விவிலிய மொழி பெயர்ப்பு ( 1777 - இல் முதற் பதிப்பு வெளி வந்தது ) அவரைப் பெருமளவில் கவர்ந்திருந்தது .

புதிய ஏற்பாட்டின் கிரேக்க மூலத்தில் இறைவனைச் சுட்டும் தெயாஸ் ( Theos ) என்னும் சொல் அப்பதிப்பில் ' பராபரன் ' என்று மொழி பெயர்க்கப்பட்டது .

வேதநாயகர் இத்தொடரைப் பல இடங்களில் ஆண்டுள்ளார் .

*' வானம் பூமியோ ? பராபரன் மானிடன் ஆனாரோ ! '* என்பது அவருடைய பாடலொன்றின் எடுப்புவரி ஆகும் .

இளமைக் காலத்தில் வேதநாயகர் இயற்றிய நூலொன்றுக்குப் ' பராபரன் மாலை ' என்று பெயர் சூட்டியுள்ளார் .

தாயுமானார் ஆண்ட ' பராபரம் ' என்னும் தொடருக்கு ஈடாகப் ' பராபர வஸ்து ' என்னும் தொடரால் இறைவனை வேதநாயகர் , குறிப்பிடுகின்றார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory