புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வேதநாயகம் சாஸ்திரியார்

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாபெரும் கொடையே வேதநாயகம் சாஸ்திரியார்

தஞ்சை சரபோஜி மன்னனின் அரச சபை , மந்திரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் கூடி வந்தனர் .

சரபோஜி மன்னன் உள்ளே நுழைந்து , தன் இருக்கையில் அமர்ந்தார். அருகில் அவர் நண்பர் வேதநாயகம் சாஸ்திரியார் .

அன்று அரசன் ஓர் வித்தியாசமான வேண்டுகோளை சாஸ்திரியாரிடம் கேட்டான் .

நீங்கள் என் தெய்வத்தைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாட வேண்டும் .

அரசனின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பினார் சாஸ்திரியார் .

மனைவி காரணத்தைக் கேட்க இருவரும் வேதனையடைந்தனர் .

அந்நேரத்தில் அவர் மனதில் எழுந்த வரிகள்தான் , *" ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் "* என்ற பாடல் . இப்பாடலை அரசவையில் சென்று பாட , அன்று முதல் மன்னன் சாஸ்திரியாரைத் தொந்தரவு செய்யவே இல்லை .

விசுவாசத்தில் நிலைத்து நின்று , தன் கவித்திறமையால் அநேகப் பாடல்களை கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடி அவைகளை இன்றும் அழியா காவியமாக்கியவரே சாஸ்திரியார் .

தனது 34 வயதிற்குள் 52 நூல்களை எழுதினார் . *" பெத்லகேம் குறவஞ்சி '* என்ற நூல் சிறந்த காவியமாகும் .

1849ம் ஆண்டு புது வருட ஆராதனையில் அவர் பாடிய பாடலே *" பாடித்துதி மனமே , பரனைக் கொண்டாடித் துதி தினமே "* என்பதாகும் .

சுவிசேடக் கவிராயர் ,
ஞான தீபக் கவிராயர் என்ற பட்டங்களைப் பெற்ற இவர் .

கிறிஸ்துவைப் புகழ்ந்து பாடுவதிலே தன் நாட்களைக் கழித்தவர் .

தன் ஆவிக்குரிய தகப்பனாகிய ஸ்வார்ட்ஸ் குருவானவர் மூலம் இறையியல் பயிற்சி பெற்ற சாஸ்திரியார் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாபெரும் கொடை .

அவர் அடிச்சுவட்டில் இன்றும் சாஸ்திரியாரின் குடும்பம் இப்பணியைச் செய்து ஆயிரமாயிரம் பேரை பாடல்கள் மூலம் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி வருவது பெரும் சாதனையே.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory