புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கிறிஸ்து ஆலயம், மிலிட்டரி லைன் திருச்சபை

கிறிஸ்து ஆலயம், மிலிட்டரி லைன் திருச்சபை வரலாறு - பாளையங்கோட்டை ,

#Tinnevelly #Historical

பாரம்பரியம் மிகுந்த தென்னிந்திய திருச்சபையின் இவ்வாலயத்தின் பின்னணியம் சரித்திர பூர்வமானது.

திருநெல்வேலி திருச்சபை உருவாகுவதற்குக் காரணமாயிருந்த குளோரிந்தா கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட குளோரிந்தா சிற்றாலயம்.

அங்கு ஆராதித்த முன்னோடியான கிறிஸ்தர்கள் ஆங்கிலேய படைத்தளபதிகள் , SPCK ( Society for the Propagetion of Christian Knowlwdge ) சங்கத்தினர் இவ்விடத்தை வாங்கி ஒரு சிறு ஆலயம் கட்டினர் .

1826 ஆண்டு SPCG ( Society for the Propagetion of Christian Gospel ) சங்கத்தினர் இவ்விடத்தை SPCK சங்கத்தினரிடமிருந்து பெற்று இப்பணியை செய்து வந்தனர் .

SPCG சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்பகுதியில் தங்களின் பணிகளைத் தொடர்ந்தனர் , ஆயினும் இவ்வாலயத்தின் கல்லரைத் தோட்டம் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது .

ஆங்கில அரசாங்கம் மாதம் ரூ . 35 வாடகை கொடுத்து வந்தது . சில காலம் சென்றபின் SPCG சங்கத்தினர் இவ்வாலய வளாகம் , கல்லரைத் தோட்டத்துடன் சேர்த்து ஆங்கில அரசாங்கத்துக்கு விற்று விட்டனர்.

இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை இவ்வளாகத்தில் அடக்கம் செய்தனர் .

1848 ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியினர் புதிய ஆலயம் கட்ட ரூ . 3930 வழங்கியிருந்தனர்.

எனவே , அவர்கள் இவ்விடத்தை ரூ . 1000க்கு வாங்கி ரூ . 466 செலவிட்டு இவ்வாலயத்தை புதுப்பித்தனர் .

1841 - ல் ஆங்கில அரசாங்கம் ஜியார்ஜ் நெல்லர் கிரீம் ( George KnclerGreame ) இச்சிற்றாலய குருவாக ( Chaplain ) நியமித்தது , அவர் 1844 வரை இச்சிற்றாலயத்தில் பணியாற்றினார்.

அதன்பின் உள்ளூர் C . M . S . சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இச்சிறாலய கவுரவ குருவாக பணியாற்றினார்கள் .

சென்னை பேராயர் டெல்டரி திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது புதுப்பிக்பட்ட இவ்வாலயத்தை 23 . 02 . 1856ம் ஆண்டு பிரஷ்டை செய்து *கிறிஸ்துஆலயம் என பேரிட்டார்.*

அந்நாட்களில் இந்த ஆலயத்தில் வழிபட்டவர்கள் 100 பேர் மட்டுமே .

ஞாயிறு ஆராதனை மாலையில் நடந்தது .

1858 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது .

காரணம் பாளையங்கோட்டையிலிருந்து வெளியேறிய காலாட்படை எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக வந்த நான்காம் படையினர் , ( fourth Regiment ) குறைவுள்ளது .

1877 - ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆராதனையில் பங்கேற்ற ஐரோப்பியர்கள் , இந்தியர்கள் என்று தனித்தனியாக பதிவு செய்தனர் .

அந்நாட்களில் இரு தரப்பினரும் சமமாக இருந்தனர் .

ஆனால் 1880 - ம் ஆண்டிலிருந்து . இந்தியர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது . ' 1915 - ம் ஆண்டிற்கு பின்னர் ஆராதனையில் பங்கு பெற்ற ஐரோப்பியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து 30 ஆகிறது . ஆனால் இந்தியர்கள் கூடுதலாக ஆராதனையில் பங்கு எடுத்தனர் .

1928 - ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்து 20க்கும் கீழானது .

தூய யோவான் கல்லூரி , 1928 - ல் இன்றைய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கல்லூரி மாணவர்கள் இவ்வாராதனையில் பங்கு பெற்றனர் .

இந்த ஆலயத்தில் முதல் திடப்படுத்தல் ஆராதனை 1859ம் ஆண்டு நடந்தது.

அதில் சென்னை பேராயர் அவர்கள் 23 பேரை திடப்படுத்தினார்கள் . இவ்வாலயம் அனேக மக்களுக்கு அமைதியாய் ஆண்டவரின் பாதத்தில் காத்திருப்பதற்கும் , ஜெபிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது .

ஞாயிறு ஆராதனை மாலை மட்டும் நடந்தது . VMCA , TOC , H . YWCA சங்கத்தினர் SCM கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தினர் இந்த ஆலயத்தை தங்களின் வழிபாட்டுக்கும் பயன்படுத்திவந்தனர்.

பாளையங்கோட்டை இசை கழகத்தினர் ( palayamkottai MusicalASSOCciation ) இந்த ஆலயத்தை தாகம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் , காலஞ்சென்ற பேராசிரியர் G . John Devadason அவர்கள் இசைக்குழுவின் தலைவராகவும் , அவரது துணைவியார் பேராசிரியை தேவதாசன் Organist ஆகவம் சிறப்பான இசைத்தொண்டு செய்துள்ளனர் , 1940 - ம் ஆண்டில் மலையாள கிறிஸ்தவர்கள் இப்பேராலயத்திலுள்ள 2 கல்லூரிகளிலும் பணியாற்ற வந்தனர்.

எனவே , அவர்கள் குடும்பத்தினர் இந்த ஆலயத்தில் ஆராதனையில் ஒழுங்காய் பங்கு எடுத்தனர் .

அந்த நாட்களில் 80க்கும் அதிகமானவர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தனர் .

1953க்குப் பின்னர் மலையாள கிறிஸ்தவர்கள் குறைய ஆரம்பித்து 40 பேர் மட்டும் இங்கு வழிபாட்டில் ஈடுபட்டனர் .

1954ம் ஆண்டு Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலயத்துக்கு Deacon ஆக பொறுப்பு ஏற்றார் .

1955ம் ஆண்டு முதல் ஒரு கவுரவ போதகராக அவர் பணி ஆற்றினார் .

1950ம் ஆண்டு முதல் இந்த ஆலயம் திருநெல்வேலி அத்தியட்சாதீனத்தில் அங்கம் பெற்று 1954 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்திலிருந்து அத்தியட்சாதீனத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலய கவுரவ குருவாக 1954 முதல் 1981 வரை சிறப்பான பணி செய்துள்ளார் .

காலை , மாலை இரு ஆராதனைகளையும் நடத்துவார்கள்.

அவருடைய பணி காலத்தில் தான் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலை 9 மணிக்குத் தமிழ் ஆராதனை நடத்த ஆரம்பித்தனர்.

இவ்வாலயத்தில் 10 - 02 - 1957ல் முதன் முதலாகத் தமிழ் ஆராதனை நடைபெற்றது .

இந்த தமிழ் ஆராதனைக்கு அருள் திரு . G . N . காந்தையா அவர்களும் நெல்லை முதல் தமிழ் பேராயர் A . G . ஜெயராஜ் அவர்களும் இதற்கு வித்திட்டவர்கள் ஆவார்கள் , தமிழ் இசை முறையில் கீர்த்தனைகள் பாடி ஆராதனை நடத்திய பெருமை Rev . காந்தையாவையே சாரும்.

Miss . ஆர்டில் அவர்கள் ஆங்கிலேயரின் இறுதி organist ஆக 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் .

1945 முதல் திருமதி ரேச்சல் தேவதாஸ் அம்மையார் 25 ஆண்டுகள் organist ஆக சிறப்பான சேவை செய்துள்ளார்கள்.

Mr . Tompson இந்த ஆலயத்தில் organist ஆக 1969 - லிருந்து 1990 வரை உற்சாகமாக பணியாற்றி உள்ளார் .

அவர் organ வாசிக்கும் திறமையினால் அனேக இளைஞர்கள் இசையில் நாட்டம் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory