புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆடிஸ் துரை

கோவையின் விடிவெள்ளியை மறந்தது ஏனோ (17.09.2019)

கோவையின் இறைதந்தை , கோவையின் விடிவெள்ளி
அருட்பணியின் சிகரம் ஆடிஸ் துரை அவர்களின்
220 வது பிறந்த நாள் இன்று (17.09.2019)
அதுசமயம் அவர் ஆற்றிய மகத்தான பெண்களுக்கு கல்வி, சமய மற்றும் சமுதாய பணிகள் ஆகும். இன்றளவும் அவர் செய்த பணிகளினால் பயனைடைந்து கொண்டிருக்கும் நாம், இன்றைய நாளில் அவரின் நினைவுகளை நினைவுகூர்ந்து அவர் ஆற்றிய போற்றிய பணிகளை பேணிக்காப்போம் வாருங்கள்...
 ஆடிஸ் ஐயர் அவர்கள் ஏப்ரல் 1827 மெட்ராஸ் வருகை
 ஆடிஸ் ஐயர் அவர்கள் ஆகஸ்டு ,1827 அப்போது உள்ள கொல்லம் மாவட்டத்தின் நாகர்கோயிலில் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.
 ஆடிஸ் அவர்களுக்கு ஜான் பால்மர் நாகர்கோயிலில் தமிழ் கற்றுக்கொடுத்தார்
 நவம்பர் ,1827 ஆண்டு சுசானா உடன் திருமணம் நடைபெற்றது
 ஆகஸ்ட் 13 ,1828 நகர்கோயிலில் குரு பட்டம் பெற்றார்
 அக்டோபர் 20,1830 தனது குடும்பத்துடன் கோயமுத்தூர் வந்தடைந்தார்
 கி.பி 1831 வரலாற்று சிறப்பு மிக்க கோவை இம்மானுவேல் ஆலயம் ஆடிஸ் அவர்களால்கட்டி முடிக்கப்பட்டது
 கி.பி 1831 ஆண்டு கோவையில் முதல் பெண்கள் பள்ளி தொடங்கி அதில்
 ஆடிஸ் மற்றும் அவர் மனைவி சுசானா அவர்களும் ஆசிரியர் பணிகளை செய்துவந்தனர்.
 கி.பி 1850 ஆண்டு ஆடிஸ் அவர்களின் மகன் சார்லஸ் ஜேம்ஸ் உதவி மிஷினரியாக கோவை பகுதியில் பணி அமர்த்தப்பட்டார்.
 கி.பி 1861 ஆண்டு ஆடிஸ் அவர்கள் உடல் ஒவ்வாமையால் தனது பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இதே ஆண்டு தனது மகன் சார்லஸ் ஜேம்ஸ் ஐயர் பணி ஒய்வு பெற்றார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory