புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -05

பங்களாச் சுரண்டை திருச்சபையும் - கிரேஸ் அம்மாளும் - திருச்சபை வரலாற்று நெடு தொடர் -05*

#Tinnevelly. #Historical

1899 - ம் வருஷம் குருத்தோலை ஞாயிறன்று பாளையங்கோட்டை பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் மகா கனம் மார்லி அத்தியக்ஷரவர்களால் கனம் ஆல்பர்ட் ஐயரவர்கள் குருப்பட்டம் பெற்றார்கள்.

அச்சமயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆங்கில வேதாகமம் இன்னமும் பத்திரமாக இருக்கிறது.

மிஷனுக்கு புதிதாக சொத்துக்களை உண்டுபண்ணுவதிலும் , இருக்கிற சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் பொதுவாகவே மிகவும் ஆர்வம் உள்ள கனம் ஐயரவர்கள் கோவில்பட்டியில் மிஷனுக்குச் சொந்தமான இடம் இல்லாதிருப்பது பெருங்குறையென உணர்ந்து அப்போது சி . எம் . எஸ் . சூப்பரின் டென்டிங் மிஷனெரியாயிருந்த கனம் கார் ஐயரவர்களுக்கு எழுதி ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் தற்போது நமது கோவில் கட்டப்பட்டிருக்கும் இடத்தைக் கிரயத்துக்கு வாங்கி அதில் கோவிலும் , குருவானவருக்கு வீடும் , பள்ளிக்கூடமும் , உபாத்தியாயருக்கு வீடும் கட்டி ஒரு கிணறும் வெட்டினார்கள் .

கோவிலிலிலும் கிணற்றிலும் 1900 என்று கல்லில் தீட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறதே யொழிய இன்னாரால் கட்டப்பட்டது என்பதற்கு யாதொரு அடையாளமும் கிடையாது .

இவ்விதமாக தன் பெயரை மறைப்பது கனம் ஐயரவர்களுக்கிருந்த ஒரு பெலவீனம் . இது தவறு . *பூர்வ சரித்திரம் எல்லோருக்கும் தெரியவேண்டுமே*.

இதே மனப்பான்மை யுடைய வேறு சுதேச குருமாரும் திருநெல்வேலியில் உண்டு .

இவர்கள் இவ்விஷயத்தில் தங்களுக்கு மாதிரி காட்டிப்போன மேல் தேச மிஷனெரிமாரின் அடிச் சுவடுகளைப் பின்பற்றினார்கள் போலும் .

பூர்வ மிஷனெரிமார் தங்கள் நாமங்கள் ஜீவ புஸ் தகத்தில் மா த் தி ர ம் எழுதப் பட்டால் போதும் எனக்கருதினர் .

ஆயினும் பூர்வ சரித் திரங்களைத் துலக்கி அவர்களுடைய நாமங்களைக் கல்லில் எழுதி வைக்க வேண்டியது பின்னடியாராகிய நமது கடமையாகும் .

மற்றப்படி நன்மாதிரிகளை நாம் பின்பற்றுவது எப் - படி ? திருநெல்வேலி டவுனில் ஷாப்டர் ஹைஸ்கூல் எனப் பெயர் வழங்கி வருகிற பழைய சி . எம் . காலேஜ் கட்டடத்தை அரும்பிரயாசம் எடுத்து 1897 - ம் வருஷம் 65 , 000 ரூபாய் - செலவில் கட்டினது ' 1880ம் வருஷம் முதல் 1920 - ம் வருஷம் வரைக்கும் அக்காலேஜுக்கு பிரின்சிப்பலாக இருந்த கனம் ஷாப்டர் ஐயரவர்கள் என்பதற்கு ஒரு அறிகுறியும் கிடையாது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory