புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

நீலகந்தகோரே சாஸ்திரி

*விவாதம் செய்வதற்காகவே வேதாகமத்தைப் படிப்பவர்தான் நீலகந்தகோரே சாஸ்திரி*

#Tinnevelly #Historical

விவாதம் செய்வதற்காகவே வேதாகமத்தைப் படிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

சிலர் எதற்கெடுத்தாலும் வேதாகம வசனங்களை சுட்டிக்காட்டி தங்கள் காரியத்தை நியாயப்படுத்துவார்கள்.

இது தவறு என்று தெரிந்தும் சிலர் துணிகரமாக இச்செயலினைத் தொடர்வது மிகவும் வேதனையானது .

நெகேமியா நீலகந்தகோரே சாஸ்திரி என்பவர் இந்து வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்.

கோங்கனி நாட்டு பிராமணவம்சத்தவர். சுவிசேஷ ஊழியர்களோடு சாமர்த்தியமாகப் பேசி , அவர்களைத் தோல்வியடைய செய்யும்படி முயற்சிப்பது இவரது வாடிக்கை.

இவ்விதமாக இவர் வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது , இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்க நேரிட்டது .

ஆம் . எவரையும் கிறிஸ்துவின்பால் ஈர்க்கும் இவ்வசனங்கள் நீலகந்த சாஸ்திரியின் உள்ளத்தில் பலமாக கிரியை செய்ய ஆரம்பித்தது .

இது தெய்வ வசனமென உணர்ந்தார் . இருதயத்தில் இயேசுவுக்கு இடம் தந்தார் . முதலில் வெளியரங்கமாக இயேசுவைக் குறித்து சாட்சியிட பயந்த இவர் , தன் தந்தையின் ஆலோசனையை நாடினார் . அவரோ இவரை மூடனென்று எள்ளிநகையாடினார்.

ஆனால் , சிலுவையின் வல்லமை இவரை முழுமையாக ஆட்கொண்டது .

ஞானஸ்நானம் பெற்று பகிரங்கமாய் இயேசு கிறிஸ்துவின் சீடனெனச்சாட்சி பகர்ந்தார் .

தன் சகோதரனையும் , மனைவியையும் அப்படியே கிறிஸ்துவண்டை கொண்டு வந்தார் .

பண்டித ரமாபாயை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய பெருமையும் இவரைச் சாரும்.

ஏழையோடு ஏழையாகத் தன் வாழ்வை ஆரம்பித்து , அவர்களுக்கு தன் வாழ்வால் போதனை செய்தார் .

சத்தியத்தைத் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் போதிப்பதில் இவர் சிறந்தவர் .

இங்கிலாந்துக்குச் சென்ற இவர் இந்தியத் திருநாட்டின் சுவிசேஷப் பணிக்குத் தேவைகள் என்ன என்பதையும் , அவைகளின் முறைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இந்தியர்களுக்கு இந்தியர்களின் முறையில் சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் கொண்டவர் .

பல புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் .

ஆண்டவர் மேலேயே நம்பிக்கை வைத்த இவர் தேவசமாதானத்தோடே தன் வாழ்நாளை முடித்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory