புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அருட்திரு . A . P . ஜெல்நைட்(1926-1935)

திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் -9

அருட்திரு . A . P . ஜெல்நைட்(1926-1935)

தென்னிந்தியாவில் Y . M . C . A செயலாளராகப் பணியாற்றி அதிக ஊதியம் பெற்ற இவர் , இங்கு களமியம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் வகித்த பதவியைத் துறந்து , ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணம் செய்து , குடும்பமாகத் தோர்ணக்கல்லுக்கு வந்தார் .

சில மாதங்களுக்குள் தெலுங்கு மொழியைக் கற்று , தோர்ணக்கல் வேதாகமக் கல்லூரியில் 1929 ஆம் ஆண்டு குரு பட்டம் படித்தார் .

பழைய குரு வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் இவருடன் , அருட்திரு . ஜார்ஜ் S . C . அசரியாவும் , நானும் ஒரே நேரத்தில் குரு பட்டம் பெற்றோம் . மேற்பார்வை ஊழியராகக் கிராமங்களில் அலைந்து திரிந்து , மக்களின் துன்பங்களில் பங்கு பெற்று , சுவிசேஷம் கூறி வந்த இவரை அறியாத கிறிஸ்தவர்கள் ஒருவரும் இல்லை .

இவரது அன்பு , மனது உருக்கம் ஆகியன மற்றவர்களைக் கவர்ந்தன .

இவர் இ . மி . ச . தி . பணித்தளத்தில் கடந்த பதினொரு வருடங்கள் பணி செய்து , இரண்டாம் உலகப்போரில் போர்க்கள மதகுருவாகப் பணி செய்தார் .

இதன் காரணமாக மூன்று , நான்கு ஆண்டுகள் ஐரோப்பா , எகிப்து , பாலஸ்தீனம் முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார் .

இயேசு கிறிஸ்து பிறந்து , வளர்ந்த புண்ணிய இடங்களிலெல்லாம் சுற்றி அலைந்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதினார் . போர் முடிந்தபின் 1947 ஆம் ஆண்டில் இ . மி . ச . தி ? பணித்தளத்தில் நான்கு ஆண்டுகள் ஊழியராகவும் , செயலாளராகவும் : பணி செய்தார் .

அதிகம் ஜெபிக்கின்ற மனிதரான இவரது மனைவியும் மிகுந்த பக்தி உடையவர் . ஊழியர் , குருக்கள் , ஏழைகளிடம் மிகவும் இரக்கமும் , கருணையும் உள்ளவர் .

அனைத்து மக்களையும் ஒன்று போல் மதித்து நடப்பவர் . ஏழை மக்களின் வீடுகளுக்குச் சென்ற அம்மக்களின் கஷ்டங்களைச் சுமந்து , அவர்களுடன் உணவு உண்ணவும் செய்தார் .

இவரது சிறந்த ஊழியத்தின் மூலம் பல சபைகள் பலம் பெற்று வளர்ந்தன .

லம்பாடி மக்கள் அநேகர் இயேசு கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர் . நாகாரம் , லம்பாடி தண்டாக்களில் உள்ள மந்துலா கிறிஸ்தவ மக்களின் இன்னல்களைத் தகப்பனைப்போல சுமந்து , அவற்றைப் போக்கி ஊழியம் செய்தார் .

இவை அனைத்தும் இவரது ஜெபத்தினாலேயே செய்ய முடிந்தது .

1950 ஆம் ஆண்டில் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்று , அங்குத் சேகரகுருவாகப் பணி செய்தார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory