திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் -8*
(ஆரம்பகால ஊழியர்கள்)
1. அருட்திரு. சாமுவேல் பாக்கியநாதன்
2. திரு. டேவிட் தேவசகாயம்
3. அருட்திரு. சாலோமோன் பாக்கியநாதன்
ஆரம்பகால ஊழியம் (1903 - 1915)
*மகிமையான ஆரம்பம்*
" சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் , எனக்கு ( 1 கொரி : 9 : 16 ) என்ற வேத வசனத்தின்படி , தென் இந்தியாவிலுள்ள திருநெல்வேலியில் சில விசுவாசிகள் இருதயத்தில் ஏவப்பட்டு , ஊழியம் வந்தனர் .
இதன் விளைவாக பரிசுத்த ஆவியானவர் அவர்களது இருதயத்தில் வேரூன்றி , ஆண்டவரை அறியாத மக்கள் அடி பிரதேசங்களில் சுவிசேஷ ஊழியம் செய்ய 1903 ஆம் ஆண்டு இந்திய மிஷனெரி சங்கத்தை ஏற்படுத்தினர் .
1891 முதல் 1903 ஆம் ஆண்டு வரை ஏறெடுத்த ஜெபத்தின் மூலம் ( அதாவது *முப்புரிநூல் - ஜெபம் , சேவை , ஈகை* ) ஊழியத்தை எங்கே எப்பொழுது , எவ்வாறு தொடங்க வேண்டும் ? என்ற ஆவல் கொண்டனர் .
1903 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாகும்.
அதிலும் , பிப்ரவரி 12 ஆம் நாள் பரிசுத்த நாள் என்று கூறலாம் , ஊழியம் செய்ய ஆண்டவர் தங்களுக்குக் காட்டும் பகுதி எது என்று , 20 குருக்களும் , 12 விசுவாசிகளும் 12 மணி நேரம் முழங்காலில் நின்று கண்ணீர் விட்டு ஜெபித்தனர் .
அதன் பின் , கம்மமேட்டு சி . எம் . எஸ் ( C . M . S ) மிஷனெரி அருள்திரு . J . B . பெயின்ஸ் மூலம் ஆந்திர பிரதேசத்தின் நிசாம் இராஜ்ஜியத்திலுள்ள மானுக்கோட்டை , ஊழியத்திற்குத் தகுதியான இடம் என்று அறிந்தனர் .
அப்புதிய இடத்தில் ஊழியம் செய்ய யாரை அனுப்புவோம் ? என்ற கேள்வி எழுந்தது .
*அருள்திரு . சாமுவேல் பாக்கியநாதன்*
அச்சமயத்திலே , சிறு பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த அருட்திரு . சாமுவேலி பாக்கியநாதன் அவர்கள் இவ்வூழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து , ஏற்கனவே தான் செய்து வந்த ஊழியத்தை விட்டு விட்டு , நமது புதிய பணித்தளத்திற்குச் செல்வதற்கு ஆயத்தமானார் .
குருக்கள் , சபையினர் சேர்ந்து அர்ப்பணிப்பு ஆராதனை நடத்தி , மத்தேயு : 10 : 8 மற்றும் 10 : 16 இன் படி ஊழியரை உற்சாகப்படுத்தி 1904ஆம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் நாள் வழியனுப்ப வைத்தனர் .
இவரே , தோர்ணக்கல் பணித்தளத்தின் *முதல் மிஷனெரி ஊழியர்* ஆவார் .
இவர் ஏப்ரல் 12 ஆம் நாள் கம்மமேட்டில் உள்ள நமது பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தார் .
அப்போது அங்கு அருட்திரு . J . B . பெயின்ஸ் ஊழியராகப் பணி செய்து கொண்டிருந்தார் .
நமது முதல் ஊழியர் மிஷனெரி கம்மமேட்டு இரயில் நிலையத்தில் இறங்கி சுமை தூக்குபவர்களோ , ரிக்ஷாக்களோ இல்லாததினாலும் தன்னையோ , தனது மொழியையோ அறிந்தவர்கள் எவரும் இல்லாததினால் தனது உடைமைகளைத் முதுகிலும் , தோள்களிலும் சுமந்து கொண்டு , அருட்திரு . பெயின்ஸிடம் வந்தார் .
இவர் திரு , சாமுவேல் பாக்கிய நாதனுக்குத் தங்குவதற்கும் , தெலுங்கு மொழி கற்பதற்கும் ஏற்பாடு செய்தார் .
கடவுளின் கிருபையால் நமது ஊழியர் இரு மாதங்களில் தெலுங்கு மொழியில் பேசவும் , எழுதவும் கற்றுக் கொண்டார் .
மேலும் தாய்ச்சபையின் ஜெபத்தின் பலனாகப் புதிய தீர்மானங்களுடன் செயல்பட்டார் .
*திரு . டேவிட் தேவசகாயம்*
இவ்வாறு தெலுங்கு மொழி கற்றுக்கொண்டு இருக்கும் போது , தாய்சபையின் " யாரை நான் அனுப்புவேன் ? யார் நமது காரியமாய்ப் போவான் " ( ஏசாயா : 6 : 8 ) என்ற ஆண்டவரின் வார்த்தையைக் கேட்ட *திரு . டேவிட் தேவசகாயம்* *" இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் '* ' ( ஏசாயா : 6 : 8 ) என்ற பதிலைக் கூறி நமது ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார் .
1905 , ஏப்ரல் 6ம் நாள் புறப்பட்டு ஏப்ரல் 12 ஆம் நாள் கம்மமேட்டுக்கு வந்து சேர்ந்தார் .
அருட்திரு . சாமுவேல் பாக்கியநாதன் அவர்களுடன் இணைந்து நமது குழந்தை சபையைத் தொடங்க முன் வந்தார் .
இவ்விரு ஊழியர்களும் மானுக்கோட்டையில் முதல் முதலாக ஊழியம் செய்ய ஆரம்பித்தனர் .
அந்நாட்களில் இப்பகுதி பயங்கரமான காடுகளாலும் , அபாயகரமான மிருகங்களாலும் நிறைந்திருந்தது . மரங்கள் அடர்ந்து , இருள் நிறைந்து எளிதில் ஊடுருவ முடியாததுமாயிருந்தது .
இந்த மானுக்கோட்டை வாரங்கல் மாவட்டத்தின் ஒரு தாலூகாவாகும் .
இது கம்மமேட்டுக்கு வடபகுதியில் உள்ளது . அப்போது இங்கு ஒரு கிறிஸ்தவரும் இல்லை . இப்பொழுதோ . நமது ஆண்டவர் கொடுத்த " உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப் பண்ணுவேன் " ( ஆதி : 13 : 16 ) என்ற வாக்கின்படி தாய்ச்சபை மூலம் குழந்தை சபையைத் தொடங்கி 12 , 000க்கும் மேற்பட்ட மக்கள் கிறிஸ்தவர்களாகி ஆண்டவரின் திருச்சபையில் சேர்ந்துள்ளனர் .
*திரு . சாலோமோன் பாக்கியநாதன்*
மேலே கூறப் பட்ட இரு ஊழியர்களும் கம்மமேட்டில் தெலுங்கு கற்கும் நாட்களிலேயே ' அதாவது 1906ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாளில் ' தாய்ச் சபையிலிருந்து *திரு . சாலோமோன் பாக்கியநாதன்* அவர்கள் குடும்பத்துடன் , மகிமையான ஆராதனையில் இப்பணிக் காக அர்ப்பணம் செய்யப்பட்டார் .
இவரும் , முன்னர் பணி செய்து கொண்டிருந்த இருவருமாக , மூவரும் சேர்ந்து ஊழியத்தைச் செய்ய முயன்றனர் .
ஆண்டவர் காண்பித்த மானுக்கோட்டை ( மகுபாபாபாத் ) க்கு இரயில் பிரயாணமாய்ச் சென்றனர் .
மானுக்கோட்டையில் இறங்கி தங்கும் இடத்திற்காக , அக்கிராம அதிகாரிகளிடத்தில் செல்ல , அவர்கள் , இவர்களை உடனே வெளியேற வேண்டும் என்று பலவந்தம் செய்தனர் . அதனால் , நமது ஊழியர்கள் மூவரும் துக்க முகத்துடன் கம்மமேட்டுக்குச் செல்ல இரயில் ஏறினர் .
தோர்ணக்கல் இரயில்வே சந்திப்பு நிலையம் என்பதால் நிலக்கரி போடவும் , தண்ணீர் ஊற்றவும் அதிக நேரம் ஆனதால் நிலைய நடைபாதையில் கவலையுடன் அமர்ந்து இருந்தனர் .
அவர்களுக்கு எதிரேயிருந்த ஒரு வாலிபன் , இவர்களது துக்கத்தை அறிந்து ' இங்கே , ஒருவர் தனது வீட்டை விற்கப் , போகிறார் , உங்களுக்கு விருப்பமானால் அதனை வாங்கலாம் ' என்று கூறி , மூவரையும் அவ்வீட்டிற்கு அழைத்துச் சென்றான் . மூவரும் அதைக் கண்டு , மிகவும் மகிழ்ச்சியுற்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் . சந்தித்து , அதற்கு விலை பேசி ரூ . 350 / - க்கு வாங்கினர் .
திரு . ஸ்மித் கட்டிய இவ்வீடு முன்பு ஒருவருக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும் , அவர் அதில் சாராய விற்பனை செய்து மிகவும் நஷ்டமடைந்ததினால் வாடகை கொடுக்காமலேயே ஓடிவிட்டதாகவும் கூறினர் .
அன்று முதல் நமது ஊழியர்கள் தங்கும் வரை அவ்வீடு திருடா குகையாகவும் , கழுகுகள் தங்கும் இடமாகவும் , சீர் குலைந்து , அதனைத் திரும்ப சரி செய்ய வேண்டிய நிலையில் இருந்தது " உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வ முதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள் , தலைமுறை தலைமுறையாக இருக்கு " அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய் ' ' ( ஏசாயா : 58 : 12 ) என்ற ஆண்டவர் வாக்குப்படி நமது ஊழியர்கள் மூலம் அவ்வீடு ரூ . 1925 / - செல்வ பழுது பார்க்கப்பட்டது .
இன்று அதன் விலை ரூ . 25 , 000 / - க்கு மேல் ஆகும் . இவ்வீடு இரயில் நிலையத்தின் வடக்கே அமைந்துள்ளது . அதைச் சுற்றியுள்ள ஆறு ஏக்கர் நிலத்தின் நான்கு பக்கங்களிலும் கற்சுவர் எழுப்பப்பட்டுள்ளன.
அக்கட்டடத்தின் ஒரு பாகம் ஜெப அறையாகவும் , ஒரு பாகம் நோர்ணக்கல் ஊழியர் தங்குமிடமாகவும் பயன்பட்டது .
மற்றோர் வீடு மற்றோர் பாகத்தை பாடசாலையாகவும் பயன்படுத்தினர் . இது பெரிய கட்டடமாகவும் , அகன்ற இடம் உடையதாயிருந்தாலும் , அடர்ந்த காடுகள் நிறைந்ததால் மிகவும் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது.

No comments:
Post a Comment