புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் -7 அருட்திரு . எஸ் . வி . சுவாமிதாஸ்

*திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்கள் -7*

அருட்திரு . எஸ் . வி . சுவாமிதாஸ்

1913 இல் தெலுங்கு பிரதேசத்திற்கு வந்து தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டு , தோர்ணக்கல் பாடசாலையில் மேலாளராகப் பணியாற்றிய இவர் காலத்தில் இப்பாடசாலை முன்னேற்றம் அடைந்தது .

இவர் மிகுந்த தேவபக்தியுள்ளவர்.

பேராயரின் ஆலோசனைப்படி , கம்மமேட்டிலுள்ள நமது பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பதற்குப் பிள்ளைகள் 1915 ஜூன் மாதத்திலும் , 1916 ஆம் ஆண்டிலும் , 1917 , 1918 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து அனுப்பப்பட்டனர் .

1918 இல் நடுநிலைக்கல்வி முடித்த மாணவர்கள் நந்தியாவிலுள்ள எஸ் . பி . ஜி உயர்நிலைப் பள்ளிக்கும் , மசூலிப்பட்டணம் சி . எம் . எஸ் . உயர்நிலைப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் .

கம்மமேட்டில் படித்து முடித்தவர்கள் அருட்திரு . பாக்கியநாதன் அவர்களிடம் வேதாகமம் கற்று , சபை ஊழியர்களாக அனுப்பப்பட்டனர் .

முன்பு ஊழியம் செய்தவர்கள் ஆரம்பக்கல்வி கற்று , குறுகிய காலப் பயிற்சி பெற்றவர்கள் . இப்பொழுது சபை ஊழியம் செய்கிறவர்கள் நடுநிலைக்கல்வியும் , உயர்நிலைக்கல்வியும் கற்றுத் தேறியவர்கள் . அக்காலத்தில் பிள்ளைகளுக்கு இலவச உணவு , உடை கொடுத்து கல்வியும் கற்பித்தனர் .

*சபை ஊழியர்களின் மனைவியர் , இப்பிள்ளைகளின் தாயாரை விட அதிக அன்புடன் கவனித்தனர்.*

1913 - 22 வரை பாடசாலை மேலாளராகவும் , 1922 - 27 வரை சிங்கநேரியிலும் ஊழியம் செய்தார் .

அப்போது இவரது மனைவி , ஸ்போட்டக்கம் என்ற நோயுடைய ஒரு பெண்ணைப் பராமரித்து வந்ததால் இந்நோய் இவருக்கும் தொற்றிக் கொண்டதால் அவர் இறந்தார் .

ஆனால் இவரால் பராமரிக்கப்பட்ட பெண்ணோ பிழைத்துக் கொண்டார் - கர்த்தருக்குள் மரித்தவர்கள் அவருக்கு மிகவும் பிரியம்.

அருட்திரு . எஸ் . வி . சுவாமிதாஸ் அவர்கள் 1929 - 1930 வரை ' தோர்ணக்கல் ஐக்கிய வேதசாலையில் ஒரு வருடம் பணியாற்றி பின் தோர்ணக்கல் சேகரத் தலைவராகப் பணியாற்றினார் .

1934 ஆம் ஆண்டில் ஊழியம் செய்வதற்குப் பர்மா சென்றார் .

அங்குள்ள மக்களின் மூலம் பல கஷ்டங்களை அனுபவித்தார் .

பின்னர் அம்மக்களால் குத்தப்பட்டு , கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சியாக 1943 ஆம் ஆண்டில் ஆண்டவருக்குள் மரித்தார் . ( வெளி : 7 - 13 , 14 )

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory