புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -13

CMS ஒரு சுருக்கமான விளக்கம்
திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாறு 1770-2019 பதிவு -13
“நான் நட்டேன், அப்பல்லோ நீர்பாய்ச்சினான். தேவனோ விளையச்செய்தார்.( 1 கொரி 3.6)”
ஆதித்திருச்சபையை பற்றி பவுல் கூறியதுதிருநெல்வேலி திருச்சபைக்கும் மிகப்பொருத்தமாகும்.
சுவாட்ஸ் அதை நட்டார்,
சத்தியநாதனும் அவரது உபதேசிமார்களும் அதை கவனிக்கும் போடி விட்டுச் சென்றார்.
தரங்கம்பாடி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து ஊழியஞ்செய்த SPCK மிசனரிகள் வளரும் திருச்சபைக்கு நீர் பாய்ச்சினர்.
பாளையங்கோட்டையின் தேவதிட்டத்தின் படி அப்போது இராணுவ குருவாக நியமிக்கபட்டிருந்த அருள்திரு ஜேம்ஸ் ஹக் வறட்சி காலத்தில் அதை காத்தார்.
நம்பிக்கை தரும் இந்த நிலத்தை காக்க இரு பெரும் நீரோடைகள் பாய்ந்து வந்தனர்.
உதவி கோரி ஹாப் ஐயர் அனுப்பிய வேண்டுகோளுக்கு இணங்கி 1820 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு தனது ஆட்களை அனுப்பிய CMS மற்றும் அதனை அடுத்து SPG யும் களம் கண்டன.
1825 ல் SPCK தன் பணித்தளத்தை SPG யிடம் ஒப்புவித்தது.திருநெல்வேலி திருச்சபையின் இனிவரும் வளர்ச்சிக்கான பொறுப்பை இந்த இரண்டு சங்கங்களும் சேர்ந்து ஏற்று கொண்டன.
1896 ஆம் ஆண்டு அத்தியட்சர் நியமனம் பெற்ற திருச்சபையாக மலர்ந்தது.
1924 ல் பிரிந்து இருந்த இரு சங்கங்களும் தங்கள் பணித்தலங்களை ஒன்றாக இணைத்து ஒரே அத்தியட்சனமாக உருவாக்கம் கொண்டது
இதன் பின்பு தான் நம் திருமண்டலத்தில் திருச்சபையானது நற்செய்தியில் ருசிகண்டது. வறட்சி காலமாகினும், குழப்ப காலமாகினும் சபையில் விசுவாசக்குரல் ஓங்கி இருக்கும் வரையில் தேவன் அதனை பெருகசெய்வார் என்பதற்கு நம் வரலாறே ஒரு சாட்சி.
நற்செய்தியை மட்டுமே கேட்டுகொண்டிருந்த மக்கள் அதை ஏற்று கொள்வதற்கு எழுப்பிய கேள்விகளுக்கும், மிசனரிகளின் சாதுரியமிக்க பதில்களும் நம்மை வியக்கவைக்கும்.
இந்த விசுவாசகோட்டையை கட்டும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு இருந்தவர் கனம் ரேனியஸ் ஐயர் அவர்கள்.
16 வருட காலத்தில் 371 சபைகளை உருவாக்கிய மாபெரும் தேவ ஊழியர் அவர் சந்தித்த இன்னல்கள், சவால்கள் பற்றியும் காணலாம்.
ரேனியஸ் ஐயர் கட்டிய ஆலயங்களின் பெயர் பட்டியல்
( நம் வலைதளத்தில் பட்டியல் உள்ளது )
( அதில் உங்கள் ஊர் இருந்தால் Comment செய்யுங்கள்)
தொடரும்
Sujith Rex (@iamsujithrex)

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory