புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கர்த்தரின் பந்தியில் வா , சகோதரா

ஞாயிற்றுக்கிழமை திருவிருந்து ஆராதனையும் மனம் நொந்த மரியான் உபதேசியாரின் பாடலும்
மரியான் உபதேசியார் தம் சபையில் சிறந்த சீர்திருத்தங்களைச் செய்ய எண்ணினார்.
சபையின் மூப்பர் ஞானப் பிரகாசத்திற்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருவிருந்திற்கு வரமறுத்தார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவிருந்து ஆராதனை மனம் நொந்தார் மரியான் உபதேசியார்.
ஒப்புரவு இல்லாமல் திருவிருந்தில் எவ்வாறு பங்கு கொள்வது என யோசித்தார்.
நண்பரின் இல்லம் சென்று .
*" கர்த்தரின் பந்தியில் வா , சகோதரா - கர்த்தரின் பந்தியில் வா ”*
என்ற பாடலைப் பாடினார்.
மனம் நொந்த ஞானப் பிரகாசர் , இவரிடம் மன்னிப்புக் கேட்டு திருவிருந்தில் பங்கு பெற்றார்.
கீர்த்தனை 306 இச்செய்தியை வட ஆற்க்காடு திருப்பத்தூர் கிறிஸ்துகுல ஆஸ்ரமத்தாபகரில் ஒருவராகிய பெரியண்ணன் டாக்டர் சவரிராயன் ஏசுதாஸ் அவர்கள் ஒரு குறிப்பில் கூறியுள்ளார்.
*மரியான் உபதேசியார் பாடிய பாடல்கள்*
1) ஆறுதல் அடை மனமே கிறிஸ்துவுக்குள் *(கி.கீ:353)*
2) இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் *(கி.கீ:138)*
3) என் ஐயா தினம் உனை நம்பி நான் *(கி.கீ:178)*
4) என்னையும் உம தாட்டின் மந்தையோ *(கி.கீ:186)*
5) கர்த்தரின் பந்தியில் வா *(கி.கீ:306)*
6) சுந்தரப் பரம தேவ மைந்தன் *(கி.கீ:98)*
7) தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் *(கி.கீ:13)*
8) நம்பினேன் உன தடிமை நான் ஐயா *(கி.கீ:200)*
9) பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய *(கி.கீ:280)*
10) புத்தியாய் நடந்து வாருங்கள் திரு வசனப் *(கி.கீ:257)*
11) மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து *(கி.கீ:255)*
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory