மிஷனரி மாற்கு டேனியல் பாண்டேன்*
சேவை செய்வதில் மகிழ்ச்சி 1923ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் 26ஆம் தேதி . கனடா நாட்டில் ஒரு பிரசங்கியாரின் தவப்புதல்வனாக போதகர் மாற்கு டேனியல் பாண்டேன் பிறந்தார்.
சிறுவயதிலேயே மிஷனெரிகளைக் குறித்ததான அநேக புத்தகங்களை விரும்பி படிப்பார். தானும் இவர்களைப் போன்ற சிறந்த ஓர் மிஷனெரியாக மாறவேண்டும் என்று எண்ணினார்.
ஆயினும் , கடவுளின் அழைப்பிற்காக காத்திருந்தார். 1942ஆம் ஆண்டு . வானொலி நிலையத்திலிருந்து தன்னுடைய பணியை முடித்து விட்டு களைப்புடன் வீட்டிற்கு வந்தார்.
படுக்கையில் சாய்ந்த சில மணித்துளிகளில் ஆண்டவர் தன்னோடு பேசுவதை உணர்ந்தார்.
உலகப்பிரகாரமான வேலையை தள்ளிவிட்டு தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்.
1954ஆம் ஆண்டு தனது மனைவி ஹில்டாவுடன் இந்தியாவிலுள்ள கல்கத்தா வந்தார் . *" மிஷன் ஆப் மெர்சி "* என்ற நிறுவனத்தை தோற்றுவித்து அநேக மக்களின் வாழ்க்கையை பிரகாசமடையச் செய்தார்.
1964ஆம் ஆண்டு *' அசெம்பிளீஸ் ஆப் காட் '* என்ற பள்ளிக்கூடத்தை கல்கத்தாவில் நிறுவினார்.
மேலும் தொழிற்கல்விக் கூடத்தையும் , ஆசிரியர் பயிற்சி பள்ளியையும் ஆரம்பித்தார் .
*1965ல் மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.*
தற்போது 20000க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.
இவருடைய சேவையைப் பாராட்டி 1969ம் வருடம் அமெரிக்காவின் பெத்தானி வேதாகமக் கல்லூரியும் , 1984யில் கொலம்பியா மிசோரி பல்கலைக்கழகமும் இவருக்கு பண்டிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
கடவுளுக்காய் பெரிய காரியங்களைச் செய்தும் , மற்றவர்களை இப்பணியில் உற்சாகப்படுத்திய சிறந்த மிஷனெரி மாற்கு டேனியல் பாண்டேன் 1989ஆம் ஆண்டு ஜீன் 3ஆம் தேதி இறைவன் பாதம் சரணடைந்தார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment