புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆங்கிலத் திருச்சபையும் , கிழக்கிந்திய கம்பெனியும்

ஆங்கிலத் திருச்சபையும் , கிழக்கிந்திய கம்பெனியும்*
" 1600ல் தோற்றுவிக்கப்பட்ட கிழக்கிந்திய வாணிபக் கப்பல்களின் பயணம் செய்த மாலுமிகள் , பயணிகள் போர்வீரர்களின் ஆன்மிகத் தேவைகளுக்காக ஆங்கிலிக்க ஆயர்கள் அவர்களுடன் வந்தனர் " எங்கெங்கு வியாபாரத் தலங்கள் இருந்ததோ அங்கெல்லாம் ஆங்கிலேயே குருக்களும் நியமிக்கப்படவே இவர்கள் மூலமாக கர்த்தர் நற்செய்திப் பரப்ப சித்தம் கொண்டார் .
*கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தக் குருக்களை நற்செய்தியைப் நற்செய்தியை அறிவிக்க தடை விதித்திருந்தனர்.*
எனினும் நற்செய்தியை இந்திய மக்கள் அறிந்து கொள்ள தொடங்கினார்கள்.
மற்றும் டச்சுக்காரர்கள் டேனிஷ்வர்த்தகர்களும் இந்தியாவுக்கு வந்ததன் மூலம் - கிறிஸ்துவின் வாசனை பல இடங்களில் வீசியது . சென்னை கடலூர் தூத்துக்குடி கடற்கரைகளில் இவர்கள் கட்டிய ஆலயங்கள் இன்றும் நாம் காணலாம் . ( சென்னை கோட்டை மேரி ஆலயம் ) கப்பலில் பிரயாணம் செய்த மக்களுக்கும் குடியேற்ற இடங்களிலும் போர் வீரர்களுக்கும் ஆன்மிக தேவைக்கென ஆயர்கள் அனுப்பப்பட்டார்.
எனினும் மக்களின் தேவைகளை அதிகமாக உணர்ந்து அன்புடன் கரிசனையுடன் மிஷனெரிகளை அனுப்ப தொடங்கியது - டென்மார்க் அரசே சீகன்பால்கு - இதன் முதன் முன்னோடி மிஷனெரி - இங்கு மிஷனெரி - இங்கு தமது சிறந்த சேவையின் மூலம் கிறிஸ்துவத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
இந்தியாவுக்கு நற்செய்தியை கொண்டு வந்ததில் மூன்று நாடுகள் சிறப்பாக செயல்பட்டன.
டென்மார்க் நாட்டு அரசர் மூலம் ஜெர்மன் மிஷனெரிகள் அனுப்பப்பட்டனர் .
இங்கிலாந்து நாட்டில் தோன்றிய நற்செய்தி சங்கங்களே இவ்ஊழியம் வளர உதவியது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory