அவ்வாலயத்தில் தொழுது கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை*
மிஷனரி ரிச்சர்டு ஆலன் நினைவு தினம் (26.03.1831)
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆண்டவரை ஆராதிக்கும் வாஞ்சையுடன் ரிச்சர்ட் ஆலனும் , அவரது நண்பர் அப்சலோம் ஜோன்சும் , உடன் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களுமாக இணைந்து , அந்த ஆலயத்திற்குள் நுழைந்தனர் .
முழுங்கால் படியிட்டு ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென சிலர் அவர்களை முரட்டுத்தனமாய் பிடித்து வெளியே தள்ளினர் . கருப்பு இன மக்கள் , அவ்வாலயத்தில் தொழுது கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. மிகுந்த மன வேதனையுடன் அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றனர்.
ரிச்சர்ட் ஆலன் ஒரு அடிமையின் பெற்றோருக்கு மகனாக பிறந்தார் . இவர் பெற்றோரும் , அவர்களது நான்கு குழந்தைகளும் டெலவர் விவசாயிக்கு அடிமைகளாக விற்கப்பட்டிருந்தனர் . சிறுவயதிலேயே மிகவும் துடிதுடிப்பாகவும் , உற்சாகமாகவும் காணப்பட்ட ஆலன் , எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டார் . இதனால் , வேதாகமத்தை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . இவரின் எஜமான் நல்ல மனிதராக காணப்பட்டபடியால் , திருச்சபைக்கு செல்வதை தடை செய்யவில்லை . - 1786ம் ஆண்டு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிறருக்கு அறிவிக்கவும் , தன் வீட்டிலேயே கூட்டங்கள் நடத்தவும் , அவருடைய எஜமான் தன் வீட்டை ஆலனுக்கு திறந்து கொடுத்தார் . அடிமைத்தனத்திலிருந்த ஆலனையும் அவர் குடும்பத்தாரையும் விடுதலை செய்தார்.
விடுதலைப் பெற்ற ஆலன் , 1815ம் ஆண்டிலிருந்து 1830ம் ஆண்டு வரை விடுதலையான கருப்பர்களின் தலைவராக செயல்பட்டார் . ஆப்பிரிக்கன் சபையை உருவாக்கினார் . தன்னை போன்ற கருப்பு இன மக்களுக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க , தன்னை ஒரு மிஷனெரியாக அர்ப்பணித்தார் . ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து , அடிமைகளின் வாழ்வில் கிறிஸ்து தரும் விடுதலை வாழ்வை எடுத்துரைத்தார் . 1816ம் ஆண்டு தாம் உருவாக்கிய திருச்சபையின் முதல் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அடிமையாக பிறந்து , அடிமைகளுக்காகவே வாழ்ந்த இவர் அடிமைகளின் விடிவெள்ளி.
*அருட்பணியாளர்களின் அரிய வரலாற்றிலிருந்து திரட்டியது*
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment