புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

குளோரிந்தா

பிறந்த குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள் தான் திருநெல்வேலிக்கு முதல் ஊழியக்காரி
ஞானஸ்நானம் பெற்ற குளோரிந்தா சுவிசேஷத்தை அறிவித்து வந்தார் அநேகரை கிறிஸ்துவின் மந்தையில் இணைக்க விரும்பினார் . தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்களிடம் சுவிசேஷத்தை அறிவித்தார் . குளோரிந்தாவின் வீடு வாஞ்சையை அறிந்திருந்த சுவார்ட்ஸ் பாளையங்கோட்டை திருச்சபையின் பொறுப்பைக் குளோரிந்தாவிடம் ஒப்புக் கொடுத்தார் .
ஆண்டவரின் ஊழியத்தை உண்மையோடு செய்தார் குளோரிந்தா , குளோரிந்தாவின் ஊழியத்தினால் திருச்சபை வளர்ந்து பெருகியது . சுவிசேஷத்தை அறிய அநேகர் அவருடைய வீட்டிற்கு வந்தார்கள் . வெளியே சென்றும் அவர் சுவிசேஷத்தை அறிவித்தார் .
*முதல் சபை டாப்பு* (பதிவேடு)
குளோரிந்தா ஞானஸ்நானம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து சென்றன . 1780ஆம் ஆண்டு சபையில் 40 அங்கத்தினர் இருந்தார்கள் . 1780 ஆண்டு முதல் சபை டாப்பு எழுதப்பட்டது.
குளோரிந்தாவின் பெயர் சபை டாப்பில் முதலாவதாக எழுதப்பட்டது.
*குளோரிந்தா தான் பிறந்த பிராமணக் குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள்.*
குளோரிந்தா ஆரம்பித்த சபையில் 40 பேரில் 13 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.
அந்த நாற்பது பெயர்கள்.
1 ) குளோரிந்தா பிராமண சாதி
2 ) சாராள்
3 ) ஹென்றி லிட்டில்டன்
4 ) ஜாண்
5 ) மனைவி மேரி
6 ) மகள் சூசன்னா
7 ) மகள் கிறிஸ்டினா
8 ) தாவீது
9 ) சாலொமோன்
10 ) பாஸ்கல்
11 ) மனைவி பாலி
12 ) மகன் சாமுவேல்
13 ) தாவீது வடுகர் சாதி
14 ) மனைவி பட்டி
15 ) பிச்சை முத்துப் பண்டிதர் - சலவைத் தொழிலாளி சாதி
16 ) நாகல நாயக்கர் , வலங்கை மறித்தான் - பறையர் சாதி
17 ) ஞானமுத்து ஈழவர் சாதி
18 ) மாசிலாமணி பிள்ளை
19 ) ஞானமுத்து சவளக்காரன்
20 ) நல்லதம்பி ஆசாரி - தச்சர்
21 ) தேவசகாயம் பிள்ளை - திருநெல்வேலி நகர்
22 ) மனைவி ஞானப்பூ
23 ) மகள் சூசையம்மாள்
24 ) மகன் வேதநாயகம் ( வேதநாயகம் சாஸ்திரியார் )
25 ) மகள் பாக்கியம்
26 ) மகன் சுவிசேஷமுத்து
27 ) ஞானப்பிரகாசம் செட்டியார்
28 ) குருபாதம் ஆசாரி
29 ) அக்காயி - பிச்சைக்காரி
30 ) ராயப்பன் - குதிரைக்காரன்
31 ) ராயப்பன் - பள்ளர் சாதி
32 ) ராயப்பன் - மறவர் சாதி
33 ) *🤔*- - பிராமண சாதி
34 ) மகள் பெட்ஸி வாலிமூர்
35 ) வளர்ப்பு மகன் சாமுவேல்
36 ) வேலைக்காரி - சின்னம்மாள்
37 ) மகன் ராயப்பன்
38 ) மகள் சவரியம்மாள்
39 ) சுவாமிதாசன் - பணிக்கர் சாதி
40 ) பாக்கியநாதன் - சவளக்காரன்
உன்னதமான தேவனுடைய ஊழியர்களின் தொகுப்பிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory