புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸ் ஐயர்

கொங்கராயனுக்கு இங்கென்ன வேலை?*
அடே , கோனார் பொறுத்தாலும் , கோனார் வீட்டு நாய் பொறுக்காது போல
*சரித்திரம் பேசும் சீவலசமுத்திரம்* 1828 ஆம் ஆண்டு அருள்திரு ரேனியஸ் ஐயர் நெல்லையை சுற்றி ஊழியம் செய்த காலத்தில் அவர் கண்டெடுத்த ஒரு பட்டி கண்டபட்டிக் கிராமம் . ஆதியில் இங்கு சில பிராமணர்கள் வசித்தனர், பிற மக்கள் யாவரும் அவர்களுடைய கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். 
ஆரம்பத்தில் ஆறு குடும்பத்தினர் ரேனியஸ் ஐயரின் ஊழியத்தால் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு ஆராதனை நடத்த - ஆவிக்குரிய காரியங்களில் வழி நடத்த கொங்கராயர் குறிச்சியிலிருந்து சுவாமிதாஸ் என்ற உபதேசியார் நியமிக்கப் பட்டிருந்தார்.
மூன்றாண்டுகள் வீடுகளிலும் , திண்ணைகளிலும் ஆராதனை நடந்து வந்தது . 1831 ஆம் ஆண்டு வடக்குத் தெருவில் ஒரு கூரைக் கோயில் கட்ட ஆரம்பித்தனர். அக்கோயிலைக் கட்ட விடாமல் பிராமணர்கள் கடுமையான எதிர்ப்புக் கொடுத்தனர்.
அவர்களுக்கு இயேசு கிறிஸ்து உள்ளே புகுவதைப் பற்றிக் கவலை கிடையாது .
சமத்துவமும் , சகோதரத்து வமும் உள்ளே புகுந்து விடுமே என்று அஞ்சினர்.
கொத்தடிமைக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என்று கலங்கினர்.
கோயில் கட்டுவதில் முனைந்து நின்ற சுவாமிதாஸ் உபதேசியாரிடம் ஒரு பிராமணத் தலைவர் கேட்டார். *அடே , கோனார் பொறுத்தாலும் , கோனார் வீட்டு நாய் பொறுக்காது* என்பது போல நிம்மதியாக வாழும் என் மக்களை நீ ஏன் தூண்டி விடுகிறாய் ? என் குடி களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ? கொங்கராயனுக்கு இங்கென்ன வேலை ? என்று கூறி ஒரு தடியைக் கொண்டு அவர் தலையில் தாக்கிக் கொன்று விட எண்ணி தடியை ஓங்கினார்.
உபதேசியார் தடியைப் படாரென்று பிடித்துப் பிடுங்கி பிரா மணர் தலையில் ஒரு போடு போட்டார் .பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் பொங்கியது .பிராமணர்கள் போலீஸில் முறையிட்டனர் , காவல் துறையினர் வந்து ஆறு பேரைக் கைது செய்தனர் .ஆறுபேருக்கும் தலா இரண்டாண்டுத் தண்டனை கிடைத்தது .ஆறுபேரும் சிறை செல்லும் போது ஒரு வீர சபதம் ஏற்று சவால் விட்டும் சென்றனர் .“
நாங்கள் தண்டனை முடிந்து வந்தவுடன் அம்மன் கோயிலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஜீவனுள்ள தெய்வத் திற்குக் கோயில் கட்டுவோம் ?' இவ்வாறு ஆக்ரோசத்துடன் சூளுரைத்தனர் .விடுதலை பெற்று வந்தவுடன் அவ்வாறே செய்தனர் , புதுக்கோயில் தோன்றியது .
1845 ஆம் ஆண்டு சற்று பெரிதான ஒரு கோயிலைக் கட்டினார்கள் .பிராமணர்கள் ஓட்டம் பிடித்தனர் .அவ்வூரிலுள்ள அனைவரும் கிறித்தவர்களாயினர்.
இன்று மேல் நெல்லைப் பகுதியில் மாட்சியுடன் காட்சி தரும் மகத்தான கோபுர ஆலயம் இது ஒன்றேயாகும்.
வரலாற்று நூல்களிலிருந்து திரட்டியது
*மன்னா செல்வகுமார்*

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory