மிஷனரி லூத்தர் ரைஸ் பிறந்ததினம் இன்று* (25-03-2019)
(1973-1836)
(1973-1836)
திருச்சபை பிளவு என்பது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்தது - ஒற்றுமை வேண்டும்
லூத்தர் ரைம்ஸ் இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. திருமணம் செய்து கொள்ளவில்லை . சுவிசேஷ சுற்றுபயணங்களிலேயே தன் காலங்களை செலவிட்டார் . கிறிஸ்தவ இயக்கங்களை இணைக்கும் முக்கியமான பாலமாக விளங்கினார் இவர்.
1783ம் ஆண்டு பிறந்த இவர் 1805ம் ஆண்டு கிறிஸ்துவின் அன்பால் ஆட்கொள்ளப்பட்டார் . அதோணிராம் ஜட்சனுடன் 1812ம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் வந்தார் . அடுத்த வருடமே , அமெரிக்காவுக்குத் திரும்பினார் . திருச்சபை திருச்சபையாக சுற்றுப்பயணம் செய்து , மிஷனெரி பணிகளின் முக்கியத்துவத்தை, மிகவும் ஆழமாகவும் , வலியுறுத்தியும் பேசினார்.
' திருச்சபைகள் மிஷனெரிப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டின . ஒவ்வொரு வீட்டிலும் தங்கி அவர்களோடு வேத வாசிப்பிலும் , ஜெபத்திலும் தன் நேரத்தை செலவழித்து , மிஷனெரிப் பணியின் வாஞ்சையை அவர்களிடம் உருவாக்கினார் . இவர் பாப்டிஸ்ட் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தார் . அச்சிடும் சங்கத்தையும் , முதல் பாப்டிஸ்ட் வார பத்திரிக்கையும் ஆரம்பித்தார் . சிதறிக்கிடக்கும் திருச்சபைகளை ஒன்றிணைக்க சிறந்த சிந்தனைகளை எழுதினார் .
திருச்சபை பிளவுகள் என்பது அன்று மட்டுமல்லாமல் இன்றும் நம் சமுதாயத்தில் கானா . முடிகின்றது . ஒவ்வொரு திருச்சபைக்கும் ஒவ்வொரு கொள்கைகள் , வழிபாட்டு முறைகள் , சட்ட திட்டங்கள் என பல்வேறு விதங்களில் தங்களை பிரித்து , கிறிஸ்துவில் ஒற்றுமையை காண விழைகின்றனர் , எனினும் , இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத சில காரியங்களால் , திருச்சபைகள் ஒன்றுசேரமுடியாத அவலநிலை காணப்படுகின்றது . !
இப்படிப்பட்ட , முரண்பட்ட நிலைகளை அந்நாட்களில் கண்ட லூத்தர் ரைஸ் தனக்கு இறைவன் தந்த திட்டத்தை , திருச்சபைக்குள் ஒற்றுமை ஏற்பட செய்ததின் மூலம் நிறைவேற்றினார் . இவருடைய தரிசனம் மிகவும் பரந்தது . அனைத்து திருச்சபைகளுக்கும் தன்னை பொதுவாக்கினார் . இவருடைய போதனைகள் மூலம் , அநேக மிஷனெரி சாங்கங்கள் உருவாகின . நடைமுறை வாழ்க்கைக்கு , முன்மாதிரியாக வாழ்ந்த லூத்தர் . நம்மையும் இப்பணிகளை செய்ய தூண்டுகின்றார்.
அருட்பணியாளர்களின் அறிய வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment