புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பரப்பாடி

கொடுமையால் உருவான திருச்சபை
ஒரு பண்ணையாரின் கொடுமையால் பரப்பாடியில் சபை " உருவானது ஒரு பயங்கரக் கதை பரப்பாடியில் ஒரு குளம் வெட்டத் தீர்மானித்தார் . அவ்வூர் பண்ணையார் . அது 1849 ஆம் ஆண்டு கோடைகாலம் .
ஊர் மக்கள் அனைவரும் குளம் வெட்ட வர வேண்டும் என்று தண்டோராப் போடச் செய்தார் பண்ணையார் . அவரிடம் அடியாட்கள் நிறைய இருந்தார்கள் . கர்ப்பிணி , முதியவர் , சிறுவர் , பலவீனன் என்றெல்லாம் பாராமல் கொடுமையாக வேலை வாங்கினார் . சற்று தயக்கம் காட்டினால் கூட அடியாட்களைக் கொண்டு சவுக்கால் அடித்துக் துன்புறுத்தினார் .
ஐரோப்பிய மிஷனெரி சார்லஸ் ரேனியஸ் ஐயர் அப்பொழுது டோனாவூர் மிஷனெரியாயிருந்தார் . ( இவர் நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் ஐயரின் மகன் , இவர் காலம் 1846 - 1850) திருநெல்வேலித் திருச்சபையை செப்பனிட்ட சிற்பி . சார்ஜென்ட் ஐயர் சுவிசேஷபுரம் மிஷனெரியாயிருந்தார் .
ரேனியஸ் , டோனாவூரிலிருந்து சுவிசேஷபுரத்துக்குச் செல்லும்பொழுது சவுக்கடிக் கொடுமையைக் கண்டார். குதிரையை விட்டுக் கீழே இறங்கினார் .அவரால் சகிக்க முடியவில்லை .சவுக்கையைப் பிடுங்கி அதே சவுக்கால் நிழலில் அமர்ந்திருந்த பண்ணையாரை அடித்தார்.
குடி மக்களைக் கொடுமைப்படுத்தக் கூடாதென்று கண்டிப்பான அறிவுரை கூறினார் .ஆங்கில ஆட்சியாதலால் பண்ணையார் ஆடிப் போனார் .அந்த மிஷனெரி கிறிஸ்தவர் என்றறிந்த பரப்பாடி மக்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்பினர் .சுவிசேஷபுரத்திற்கும் , டோனாவூருக்கும் கால் நடையாகச் சென்று நற்செய்தி கேட்டனர் .1851 செப்டம்பர் மாதம் பரப்பாடி சபை உருவானது .
சார்ஜென்ட் அத்தியட்சர் வாழ்க்கை வரலாற்றல் திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory