புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

போலையர்புரம்

திருமண்டல பள்ளிகளும் சபைகளும் உருவான விதம்*
*சபையை உருவாக்க முடியாத இடத்தில் பள்ளியை அமைப்பது இரேனியஸ் ஐயரின் வழக்கம்*
*போலையர்புரம் வரலாறு*
சபையை உருவாக்க முடியாத இடத்தில் பள்ளியை அமைப்பது இரேனியஸ் ஐயரின் வழக்கம் அதன்படி 1820 இல் ரேனியஸ் ஐயரவர்கள் செந்தில் காத்தபுரத்தில் ஒரு பள்ளி நிறுவினார்.
போலையர் என்ற பாதிரியார் இடையன்குடிக்குக் குதிரை யில் செல்வார்களாம் . போகும் வழியில் ஒரு பெரிய ஆலமரத் தோப்பு உண்டாம் . அங்கு தங்கி சற்று இளைப்பாறும் பொழுது அண்மையிலுள்ள செந்தில் காத்தபுரத்து மக்கள் பெருங்கூட்ட மாகக் கூடி வருவார்களாம்.
ஆற்றோரத்தில் கூடி வந்த மக்களுக்கு பவுலும் - சீலாவும் நற்செய்தி நவின்றது போன்று , போலையரும் கூடி வந்த மக்களுக்கு சுவையாகச் சுவிசேஷம் கூறுவாராம் . அங்குள்ள மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஓர் சபை உருவானது . செந்தில் காத்தபுரத்து மக்கள் தங்கள் ஊருக்குப் போலையர் நினைவாகப் ' *போலையர் புரம்* என்று பேர் வைத்தார்களாம்.
வரலாற்று புத்தகங்களிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory