புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி சாலமோன் ஹின்ஸ்பர்க்

மிஷனரி சாலமோன் ஹின்ஸ்பர்க் நினைவு தினம் - ஏப்ரல் 01
*அறியாமையிலிருந்து விடுதலை*
உண்மைக்கும் , போலிக்கும் பலருக்கு வித்தியாசம் தெரிவதில்லை . நிழற்படங்களை நிஜமென்று நினைக்க அறுபவர்கள் பலருண்டு வி . பல்கலை மூலம் கிடந்து , அதையே உண்மையென்று நினைப்பவர்களும் உண்டு.
சத்தியத்தையும் அறிவீர்கள் , சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று வேதாகமம் கூறுகின்றது . ஆம் உண்மையை அறிந்தால் , நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் . இதைக் கருத்தில் கொண்டே கமிறங்கினார்
சாலமோன்ஹின்ஸ்பர்க் . யூதர்களின் அறிவு நிலைய சங்கமாக திகழ்ந்து கொண்டிருந்தது போலந்து . அது ஒரு கூடாரப் பண்டிகை தினம் . யூத ரபிகள் கூடினர் . வேதாகம சம்பவங்களின் அடிப்படையில் தர்க்கம் செய்தனர் .
ஏசாயா . 53 தொடர் விவாதம் நீண்டது . சிறுவனான சாலமோன் ஹின்ஸ்பர்க் உள்ளே நுழைந்தார் . இவர் ஒரு புத ரபியின் மகன் . தன் தந்தையிடம் , " இவ்வதிகாரத்தில் குறிப்பிடப்படும் இறை மனிதர் யார் ? " என்று கேட்டார் . தந்தையின் முகம் கோபத்தால் சீறியது . பளீரென்ற சத்தம் , கன்னத்தில் அடி விழுந்தது . அங்கிருந்து அழுது கொண்டே கடந்து சென்றார்ஹின்ஸ்பர்க் .
இரண்டு வருட இடைவெளி . தீர்க்கதரிசி ஒருவர் ஏசாயா 53ம் அதிகாரத்தின் அடிப்படையில் போதனை செய்வதை அறிந்து , அங்கு சென்றார் . இயேசு கிறிஸ்துவே அதில் குறிப்பிடப்படும் இறைமைந்தர் என்று அறிந்து , அவரை உண்மை இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
ஓர் நாள் . தன் குடும்பத்தையும் , வீட்டையும் விட்டு , இயேசுவின் சீடனாக புறப்பட்டுவந்தார் . வேதாகம கல்லூரியில் இணைந்து , சத்தியங்களை தெளிவாகக் கற்றார் . தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்தார் . பேப்டிஸ்ட் மிஷனெரியாக பிரேசில் நாட்டை நோக்கி ஒரு பயணித்தார் . 35 வருடங்கள் இவர் செய்த பணிகள் எண்ணற்றவை . மாயையான , . போலியான காரியங்களில் சிக்குண்டிருந்த மக்களை சத்தியத்தின் பாதையிலே நடத்தி அவர்களை பாவத்திலிருந்து விடுதலைப்பெறசெய்தார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory