ஜாதியை வெறுத்த ரேனியஸ்*
1821ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரேனியஸ் செமினெரியை ஆரம்பித்தார் , அப்பொழுது உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழுபேர் சேர்ந்தனர்.
ஜூன் மாதத்தில் பத்து நாடார் குலத்தைச் சேர்ந்தவர்களும் மூன்று மூன்று ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்தனர்.
உயர் ஜாதி மாணவர்கள் தாழ்ந்த ஜாதி மாணவர்களோடு அமர்ந்து உணவருந்த மறுத்துவிட்டனர்.
*ரேனியஸ் ஐயர்* மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசினார் . அவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தாழ்ந்த ஜாதி மாணவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள் என்று பதில் அளித்தனர்.
அதோடு தங்களையும் தாழ்ந்த ஜாதி மக்களையும் பிரிக்க உணவருந்தும் அறையில் ஒரு *சுவர்* எழுப்பிவிடக் கேட்டனர்.
நாடார் ஜாதி மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து தங்களைப்பிரிக்க மறைவு கட்டக் கோரிக்கை வைத்தனர்.
ரேனியஸோ உடனடியாக நான் செமினெரியை மூடிவிட்டேன். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிவிட்டார்.
1822ஆம் ஆண்டு ஜாதி பேதம் பார்க்காமலிருப்போம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுபடியும் ரேனியஸ் செமினெரியை ஆரம்பித்தார்.
அந்த செமினெரிதான் *பிஷப் சார்ஜென்ட் ஆசிரியப் பயிற்சி பள்ளி*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment